புகைப்பட ஹைக்கூ 9
புகைப்பட ஹைக்கூ 9
கறுத்ததும்
மகிழ்ந்தார்கள்!
மேகம்!
முழு பூசணிக்காய்
சோற்றில் மறைத்தது!
மேகம்!
மலையை தழுவியது
குளிர்ந்தது பூமி!
மேகம்!
பகலை
இருட்டாக்கியது
கார்மேகம்!
கறுத்த பெண்
அழுகிறாள்
மேகம்!
ஓடி விளையாடின
ஒளிந்து விளையாடின
மேகங்கள்!
குளிர்ந்ததும்
குளிர்வித்தது
மேகம்!
திரையிட்டதும்
வெளிவரவில்லை சூரியன்!
மேகம்!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
மேகம் அருமை
ReplyDeleteமேக ஹைக்கூக்கள் அருமை!
ReplyDelete