புகைப்பட ஹைக்கூ 16
புகைப்பட ஹைக்கூ 16
பூவோடு பூவாக
பூத்து நிற்கிறது
வண்ணத்துப்பூச்சி!
மயங்கியது
மலர் மட்டுமல்ல
மனசும்தான்!
தேன் சிந்தியதும்
தலைகவிழ்ந்தது
பூ
மலருக்கு
மஞ்சள் பூசியது
வண்ணத்துப்பூச்சி!
பூவில் பூத்தது
உயிருள்ள பூ
வண்ணத்துப்பூச்சி!
இயற்கை அழகில்
மூழ்கியது மலர்
வண்ணத்துப்பூச்சி!
திருடு போனது
மகரந்தம் மட்டுமல்ல
மனசும்!
வண்ணம் சிதறினாலும்
எண்ணம் சிதறவில்லை
வண்ணத்துப்பூச்சி!
பூக்களின் சிரிப்பில்
பூத்தது
வண்ணத்துபூச்சி!
சிறகில்
சித்திரம் படைத்தது
வண்ணத்துப்பூச்சி!
மலர்க்கணையில்
மயங்கியது
வண்ணத்துப்பூச்சி!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
வரிகளும் அழகு...
ReplyDeleteஆஹா , எத்தனை எத்தனை கற்பனைகள் ..
ReplyDeleteகவிதை உருவாக்கங்கள் ..அருமை..!