தத்துபித்துயிசம் BY தளிர் அண்ணா part 2

தத்துபித்துயிசம் BY தளிர் அண்ணா  part 2

*ரோட்டோரத்தில் பஸ்ஸுக்காக காத்திருக்கையில் சாலையோரக்கடைகளின் பலகாரவாசனைகள் மூக்கைத் துளைத்து பசியைக் கிளப்பி விடுகின்றன. # ரோட்டாலஜி

*ஒவ்வொரு முறை தப்பு செய்யும்போதும் இதுதான் கடைசி இனிமேல் இல்லை என்று சொல்லி நம்மை தேற்றுகிறது மனசு  # மனசாலஜி

*ரோட்டோரத்தில் பூ விற்கும் பெரும்பாலான பெண்கள் பூவை இழந்திருக்கிறார்கள் ஆனாலும் பூதான் அவர்கள் வயிற்றை கழுவ உதவுகிறது  #  முரணாலஜி

*பஸ்சின் ஜன்னலோர இருக்கைக்கு ஆசைப்படும் மனசு எல்லாரையும் பின் தள்ளி சீட் பிடிக்க உந்துகிறது.  # பஸ்சாலஜி

 ·        எல்லா பஸ் நிலையத்திலும் டீயும் தினதந்தியும் கிடைக்கிறது ஆனால்  சுத்தமான காற்று கிடைப்பது அரிதாக உள்ளது.  #  லைஃபாலஜி

·        நம் முன்னால் டூ வீலரில் செல்லும் பெண்ணை முந்துவதில் உண்டாகும் மகிழ்ச்சி அவளை முந்தியதும் அடங்கிப் போகிறது  # ஜெண்ட்சாலஜி

·        ஊர் ஊராய் சுற்றினாலும் சொந்த ஊரில் கால் பதிக்கையில் லேசாகிப் போய் துள்ளி குதிக்கிறது மனசு  # மனசாலஜி

·        கலர் கலராய் யூனிஃபார்ம் தந்து  கரைந்து போனது யூனிட்டி! மிஞ்சி நிற்பது இப்போ கவர்மெண்டின் ஃபார்மாலிட்டி  #ஸ்கூலாலஜி

·        ஒவ்வொரு விடியலும் ஒவ்வொருவருக்கும் அழகாய்தான் விடிகிறது ஆனால் ஒவ்வொரு இரவும் அனைவருக்கும் அழகாய் முடிவதில்லை! # லைபாலஜி

·        பக்கத்து சீட்டில் பெண் உட்காரும் போது நெளியும் ஒவ்வொரு ஆண்மகனும் உண்மையில் அந்த சந்தர்ப்பத்தை ரசிக்கத்தான் செய்கிறார்கள் # ஜெண்ட்சாலஜி

·        எல்லா ஊரிலுமே வேலைக்கு வெளியே செல்லும் பெண்களைப் பற்றி எல்லாமும் சொல்கிறார்கள் அவள் கொண்டு வரும் சம்பளத்தை தவிர. # லைபாலஜி

·        எல்லா கணக்கு வாத்தியார்களும் கையில் பிரம்போடு அலைவது கணக்கு எடுக்கவா? இல்லை சுளுக்கு எடுக்கவா? # ஸ்டூடண்டாலஜி

·        தொலைவில் வரும் பெண்ணின் பெர்ப்யூம் வாசனையில் தொலைந்து போகிறது ஆணின் மனசு. # ஜெண்ட்சாலஜி

·        டி வி சீரியல் பார்க்கும் எல்லா பெண்களுமே வில்லிகளை சபிக்கிறார்கள் தாமும் அவர்களில் ஒருவர் என்று உணராமலே! # டிவியாலஜி
·        எல்லா டிவி சீரியல்களுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை கதையை தேடுவதுதான் # டிவியாலஜி

·        காலியாக வரும் பேருந்துகள் எல்லாம் அனேகமாக நாம் செல்லும் இடத்திற்கு போவதில்லை # வயிற்றெரிச்சல்


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு பிடித்து இருந்தால் கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2