ஐயோ பாவம்! லோக்பால்! அன்னாவின் பரிந்துரைகள் நீக்கம்!


டெல்லி: அன்னா ஹஸாரே உள்ளிட்டோரின் பரிந்துரைகளை முற்றிலும் நிராகரிக்கும் வகையில் மத்திய அரசு லோக்பால் மசோதாவை மாற்றியமைத்து விட்டது. பிரதமர், நீதித்துறைக்கு மசோதாவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு உயர் அதிகாரிகளுக்கும் இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மத்திய அமைச்சரவை இன்று கூடி லோக்பால் மசோதாவை பரிசீலித்து அதற்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இந்த மசோதா, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவுள்ளது மத்திய அரசு.

இன்று காலை கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் லோக்பால் மசோதா குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் இறுதியில் மசோதாவை ஏற்பது என ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களை அமைச்சர்கள் சல்மான் குர்ஷித் மற்றும் அம்பிகா சோனி ஆகியோர் கூட்டாக சந்தித்தனர். அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

லோக்பால் மசோதாவை மத்திய அமைச்சரவை ஏற்றுள்ளது. இந்த மசோதா திட்டமிட்டபடி மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்.

லோக்பால் அமைப்பில் தலைவர் மற்றும் 8 உறுப்பினர்கள் இருப்பார்கள். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைவராக செயல்படுவார்.

லோக்பால் அமைப்பில் 50 சதவீதம் பேர் நீதித்துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

ஒருவர் மீது ஊழல் நடந்து 7 ஆண்டுகளுக்குப் பின்னர் புகார் கொடுத்தால் லோக்பால் அமைப்பு அதை விசாரிக்காது, ஏற்காது.

பிரதமருக்கு விலக்கு

லோக்பால் வரையறையிலிருந்து பிரதமர், நீதித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

அதேபோல அரசு உயர் அதிகாரிகளுக்கும் இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

பிரதமராக இருப்பவர் மீது ஊழல் புகார் எழுந்தால் அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரே விசாரிக்க முடியும்.

அனைத்து மாநிலங்களிலும் இதேபோல லோக்பால் மசோதாக்களை தாக்கல் செய்யுமாறு முதல்வர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதவுள்ளார்.

லோக்பால் மசோதாவில் திருத்தம் தேவைப்பட்டால், அதை நாடாளுமன்றமே முடிவு செய்யும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அன்னாவின் பரிந்துரைகள் முற்றிலும் நிராகரிப்பு

சமூக
சேவகர் அன்னா ஹஸாரே குழுவினர் லோக்பால் மசோதா தொடர்பாக அளித்திருந்த அத்தனை பரிந்துரைகளையும் மத்திய அமைச்சரவை தூக்கி குப்பையில் போட்டு விட்டதையே இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.

இதனால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 16ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஹஸாரே தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 நன்றி தட்ஸ் தமிழ்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்தினை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!


Comments

  1. இது எதிர் பார்த்ததுதான் ........பட் இவங்க திருந்தக்கூடிய நேரம் விரைவில் வரும் !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2