அட்றா சக்க ! ஆர்.ஐ!

 அட்றா சக்க ! ஆர்.ஐ!
 (தோழர் சி.பி.செந்தில்குமார் மன்னிப்பாராக!)
அண்மையில் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது கிடைத்த சுவாரசியமான தகவல் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அந்த நண்பருக்கு எனது தந்தை வயது இருக்கும் என் தந்தையின் நண்பர் எனக்கும் நண்பர். விஷயத்தை சொல்லுமய்யா என்கிறிர்களா? சரிசரி டாபிக்குக்கு வருகிறேன். அவரது மகனுக்கு சமீபத்தில் பெண்குழந்தை பிறந்தது. முதலாவதும் பெண்தான் இரண்டு பெண் குழந்தை என்பதால் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் போது தான் வந்திருக்கிறது வினை.

   முதல் பெண்குழந்தைக்கு பர்த் சர்டிபிகேட்டில் மதுமிதா என்று பதிந்தவர்கள் ரேசன் கார்டில் மணிஷா என்று பதிந்து விட்டிருக்கிறார்கள். வீட்டில் கூப்பிடுவது மணிஷாவாம். ரேசன் கார்டிலும் அதையே பதிந்து விட்டார்கள் இப்போது உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் போது ரேசன் கார்டில் ஒரு பெயர் பர்த் சர்டிபிகேட்டில் வேறு பெயர். என்ன செய்வது என்று பிரசவித்த மருத்துவமணையில் போய் கேட்டுள்ளார். அவர்கள் இங்கு பெயர் மாற்ற முடியாது ரேசன் கார்டில் வேணுமானால் மாற்றலாம் தாலுகா ஆபிஸ் போய் மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்கள்.
   தாலுகா ஆபிஸில் முடியாது என்று பிகு பண்ணி வி.ஏ.ஓ மற்றும் ஆர்.ஐ யிடம் கையெழுத்து வாங்கி வந்தால் மாற்றித் தருவதாக கூறி திருப்பி உள்ளனர். வி.ஏ.ஓ விடம் அலைந்து திரிந்து கையெழுத்து வாங்கியவர் ஆர். ஐ யிடம் கையெழுத்து வாங்க அவரது அலுவலகத்திற்கு சென்றுள்ளார். ஆர் ஐ ஒரு பெண்மணியாம். சென்னை கேளம்பாக்கம் பகுதியிலிருந்து எங்கள் கிராம பகுதிக்கு வரவேண்டுமாம். அவர் வந்துசேரவே மணி காலை பதினொன்று ஆகி விடுமாம்.
  முதலிரண்டி நாட்கள் ஜமாபந்தி அது இது என அலைகழித்துள்ளார் நண்பரை. இன்னும் இரண்டு நாட்கள் கழித்து வருமாறு கூறியுள்ளார். இரண்டு நாள் கழித்து சென்ற போது வீடு ஷிப்ட் செய்வதால் இன்று நான் லீவ் நாளைக்கு வரும்படி கூறியுள்ளார். அவரிடம் கையெழுத்து வாங்க நண்பர் மட்டுமல்ல ஆதரவற்ற முதியோர்கள் ஜாதி சான்றிதழ் கோரி வரும் மாணவர்கள் என சில நூறு நபர்கள் காத்து நின்றுள்ளனர்.
   மாணவர்களுக்கு மட்டும் கைஎழுத்து போடுகிறேன் மற்றதெல்லாம் அப்புறம் என்றுள்ளார் ஒரு நாள். அடுத்த நாள் அதிகாலையே சென்று காத்திருந்துள்ளார் நண்பர். ஆர்.ஐயின் உதவியாளர் தினம் வந்துவந்து திரும்பி போகிறார்களே என்று பரிதாபபட்டு எழுத வேண்டியது எல்லாம் நானே எழுதி விடுவதாகவும் கையெழுத்து மட்டும் போடும் படியும் மக்கள் காத்து கிடக்கிறார்கள் என்று எடுத்து சொல்லியும் அரை மனதாக ஒப்புக்கொண்டுள்ளார் ஆர்.ஐ.

உதவியாளர் பாரத்தில் நிரப்ப வேண்டியதை நிரப்பிக் கொடுக்க முதல் ஆளாய் கையெழுத்து வாங்க நின்றுள்ளார் நண்பர். அப்பொழுது ஒரு நபர் திருமண உதவித்தொகை பெறுவதற்காக மூன்று பாரங்களை நிரப்பி கூடவே மூன்று நூறு ரூபாய்களை வைத்து நீட்டியுள்ளார். பணத்தினை பையில் வைத்த அதிகாரி உடனே கையெழுத்திட்டுள்ளார். இதை பார்த்துக் கொண்டிருந்த நண்பருக்கு வந்ததே கோபம் காசுதான் தேவையென்றால் முதலிலேயே கூறியிருக்கலாம் அல்லவா? ஒரு வாரம் இழுத்தடித்து நண்பரின் வேலையை கெடுத்து.. மணுவைநீட்டியுள்ளார் நண்பர். வாங்கி படித்த அதிகாரி  என்ன உடனே மாத்திடுவியா? அவ்வளவு அவசரமா என்று சிடுசிடுத்துள்ளார். நண்பர் வில்லங்கமான ஆள். மேடம் எனக்கு முன்னாடி மூணு பாரம்ல மூணு நூறு வாங்கினு கையெழுத்து போட்டிங்களே அவங்களுக்கு என்ன அவசரம் அவங்க எந்த ஸ்கூல்ல சேரப்போறாங்க? ஸ்கூல் பசங்களுக்கு மட்டும் தான் கையெழுத்து போடுவீங்கன்னு சொன்னீங்க அவங்க எந்த ஸ்கூல்ல சேரப்போறாங்க? காசை வாங்கி பையில போட்ட புறம் கை தானா கையெழுத்து போடுது ஒரு வாரமா வேலைய விட்டுட்டு காத்து கிடக்கோம் நூறு ரூபாய்கு ஒரு கையெழுத்தா முதல்லயே சொல்லி இருக்கலாமுல்ல என்று விளாசா பின்னால் நின்றவர்களும் பிலுபிலுவென பிடித்துக்கொள்ள மிரண்டு போன அதிகாரி முதல்ல கிளம்பு என்று கையெழுத்து போட்டு நண்பரை விரட்டியுள்ளார். எப்படி இருக்கிறது பாருங்கள் நமது அரசாங்க அலுவலகங்களின் நிலை!
 
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!


Comments

  1. தமிழ்வாசி - Prakash said...

    அட்ராசக்க ஆர்.ஐ.
    அப்படி போடு அறுவாளே! நன்றி நண்பரே தங்கள் வருகைக்கு!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2