ஆவி அழைக்கிறது! பகுதி 10
ஆவி அழைக்கிறது!
பகுதி 10
எழுதுபவர் “பிசாசு”
முன்கதை சுருக்கம்: ஆழ்வார் குறிச்சியில் உள்ள தன்னுடைய பங்களாவை சீர்படுத்த முயலும் தனவேல் முதலியாருக்கு பொன்னம்மா எனும் ஆவி துன்பங்களைத் தருகிறது.இதற்கிடையில் அந்த பங்களாவில் தனியாக நுழைந்த நிதிலா எலும்புக்கூட்டை கண்டு பயந்து வெளியே ஓடிவர காப்பாற்றுகிறான் ஸ்ரீ வத்ஸன் எனும் இளைஞன். இருவரும் மீண்டும் பங்களாவில் நுழைகின்றனர்.
இனி:
மிஸ்டர் ஸ்ரீவத்ஸன் நிங்க என்ன பண்றீங்க?
இப்ப உங்க கூட நடந்துகிட்டிருக்கேன்!
நிதிலா முறைத்தாள். முறைக்காதீங்கமுறைக்காதீங்க! பி.எஸ்.ஸி மேத்ஸ் முடிச்சிட்டு விவசாயம் பண்ணிகிட்டு இருக்கேன் வேலை தேடிகிட்டும் இருக்கேன்.
நானும் பி.எஸ்.சி மேத்ஸ்தான் ஆமாம் நீங்க எந்த காலேஜ்?
ஐயோ நான் காலேஜ்லாம் போகலீங்க! கரஸ்ல முடிச்சேன், நீங்க சிட்டில இருக்கீங்க அடிக்கொரு காலேஜ் இருக்கும் இது குக்கிராமம் இங்கிருந்து சிட்டிக்கு போயி படிக்க அவ்வளவா வசதி படல.
ஓக்கே ஒக்கே ஏன் இவ்வளவு வருத்த படறீங்க நான் எதார்த்தமாதான் கேட்டேன். நீங்க சொல்றதும் வாஸ்தவம் தான் இந்த ஊருலருந்து காலேஜ் போய்வர சிரமமாதான் இருக்கும். பேசிக்கொண்டே இருவரும் பங்களாவினுள் நுழைந்திருந்தனர்.
இவர்கலின் பின்னால் நல்ல முத்துவும் தனவேலும் வந்திருந்தனர். உள்ளே மயான அமைதி நிலவியது. ஏதோ எலும்புக்கூடுன்னு சொன்னீங்களே! எங்கே அம்மணி? ஏளனமாக கேட்டான் ஸ்ரீவத்ஸன்.
இதோ இங்க தான் பார்த்தேன் என்றாள் நிதிலா அவள் காட்டிய திசையில் வெறிச்சோடி கிடந்தது. உள்ளே யாரும் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை.
ஸ்ரீவத்ஸனின் கேலிப்பார்வையை தாங்க முடியாமல் நிதிலா தலை குனிய தனவேலு ஏம்மா நிதிலா இங்க ஓண்ணுமே காணலியே நீ எதை பார்த்து பயந்தே? என்று கேட்டார்.
அதான் நான் சொன்னேனே சார் பேயாவது பிசாசாவது! இந்த கம்ப்யூட்டர் யுகத்திலே! உங்க பொண்ணு இங்க வந்து ஏதோ கணா கண்டு உளறிகிட்டு இருக்காங்க!
இல்ல இல்ல நான் பார்த்தது நிஜம்!
சரி நீங்க பார்த்தது நிஜம்னா இப்ப எங்கபோச்சு அந்த எலும்பு கூடு அது பேசக்கூட வேண்டாம் ஆனா ஒரு எலும்பு கூட காணோமே?
நீங்க நம்பா விட்டா போங்க நம்ப வேண்டிய அவசியமும் இல்லே ஆனா நான் பாத்தது நிஜம்.
பொண்ணு நல்லா பயந்து போயிருக்கா நம்பூதிரி கிட்ட போயி மந்திரிக்கணும் என்றார் நல்ல முத்து.
நம்பூதிரிகிட்ட போக வேண்டியது இல்லே நல்ல டாக்டர் கிட்ட தான் போகணும் என்றான் ஸ்ரீவத்ஸன்.
நிதிலா அவனை முறைத்தாள். முறைக்காதீங்க நிதிலா நான் சீரியஸா சொல்லிகிட்டு இருக்கேன்
அப்ப நாங்க எல்லோருமே மெண்டல்னு சொல்றீங்களா?
அப்படி நான் சொல்லலியே!
பின்ன எப்படி சொல்றீங்க? நீங்க பேசறது அப்படிதானே இருக்கு!
சரி சரி நமக்குள்ள எதுக்கு சண்டை? பொழுதும் போயிடுச்சு வீட்டுக்கு கிளம்புவோம் என்றார் தனவேல்.
அனைவரும் வெளியே வந்தனர்.எங்க வீட்டுக்கு வாங்களேன் டீ சாப்பிட்டு போகலாம் என்றார் தனவேல்.
அழைப்புக்கு நன்றி ஐயா! இப்ப வர முடியாது இன்னொரு சமயம் பாக்கலாம்!
ஸ்ரீவத்ஸன் கிளம்ப இவர்களும் கிளம்பினர்.
அடுத்த நாள் காலை, மந்திரவாதி கேசவன் நம்பூதிரி முன் தனவேல் முதலியார் அமர்ந்திருந்தார்.அவரது முகம் வியர்த்துக் கொட்டியது. நம்பூதிரி நேற்று என் மகளையே அந்த ஆவி மிரட்டி இருக்கு. நாம என்ன செய்யறது அந்த பங்களாவை புதுப்பிக்கறதுதான் அந்த பொன்னம்மாவுக்கு பிடிக்கலைன்னா நான் கிளம்பிடறேன் ஆனா மறுபடியும் இந்த ஆவி தொல்லை பண்ணாம காப்பாத்தணும்.
பயப்படாதேயும் முதலியார் ஏன் உமக்கு இப்படி வியர்க்குது! யான் உபாசிக்கும் மாகாளி முன் இந்த ஆவி எல்லாம் தூசுதான். யான் அவ்வாவியை வதம் செய்து உம்மை ரட்சிப்பேன் இது எண்ட மாகாளி மேல் சத்தியம்! என்றான் நம்பூதிரி
இல்ல அந்த பொன்னம்மாவால என் பொண்ணுக்கு ஏதாவது... அவளை நான் ஏமாத்திட்டேன் அந்த ஆவி என் மகள ஏதும் பழி வாங்காதே?
பொன்னம்மாவோட பொண்ணுதானே நிதிலா அது எப்படி உன் மகள பழி வாங்கும்?
இது இது உங்களுக்கு எப்படி தெரியும்?
நம்பூதிரி எல்லாம் அறிவான் இந்தாரும் தாயத்து இதை அணிந்து கொள்ளும் இந்த ரட்சை உம்மை பாதுகாக்கும். வரும் அமாவாசை உன்னோட வீட்டில் பூசை போட்டு அந்த துஷ்ட ஆவியை வதம் செய்வான் இந்த நம்பூதிரி.
அதி செய்தால் நான் மிகவும் கடமை பட்டவனாவேன் நம்பூதிரி!
பயப்படாதேயும் நான் இருக்கேன் நீர் தைரியமாயிட்டு இரும் என்று வழி அனுப்பி வைத்தான் நம்பூதிரி.
என்னப்பா எங்க போயிட்டு வர்ரீங்க? நம்பூதிரி வீட்டுக்கா கையில தாயத்து நெற்றியில் விபூதி உங்கள வச்சு வசூல் பண்றதுன்னு முடிவெடுத்துட்டான் போல என்றாள் நிதிலா.
அப்படி எல்லாம் கேலி பேசாதே நிதிலா இந்த ஆவி ரொம்ப மோசமானது உன்னை கூட நேத்து மிரட்டுச்சுல்ல!
அதான்ம்பா நானும் சொல்றேன் இந்த ஆவி பூதம் பங்களா இதையெல்லாம் விட்டுட்டு சென்னைக்கே போயிட்டா என்ன?
முடியாதும்மா நான் முதல்ல சொன்னப்ப நீ வேண்டாம்னு சொன்னே இப்ப புலி வாலை பிடிச்சாச்சு விட முடியாது
ஏம்பா? ஏன்? இப்ப நம்பள தொந்தரவு செய்யற ஆவி சென்னைக்கு வராதா?
நிதிலா பதில் பேசாது விழித்தாள். அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் உதித்தன. தனவேல் இனி ரெண்டுல ஒண்ணு பாத்துடவேண்டியதுதாம்மா வர அமாவாசைக்கு மறுபடியும் பூசை செய்யறதா நம்பூதிரி சொல்லியிருக்கார்.
சரிப்பா உங்க இஷ்டம் என்றாள் நிதிலா.
அன்றைய இரவில் தனவேல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். திடிரென அவர் அறையில் சுற்றிய மின் விசிறி நின்று போக தனவேல் கண்விழித்தார். தூரத்தே நாய்களின் குறைச்சல் கேட்க அவர் அறையில் ஒருவித ஊதுபத்தி வாசம் வந்தது.
அத்துடன் ஒரு பெண்ணின் அழுகுரல் துல்லியமாக கேட்க தனவேலுக்கு வியர்த்துக் கொட்டியது. யா.. யாரு என்று நா பிறழ கேட்க அழுகை நின்று ஹா! ஹா! என்று சிரிப்பொலி அறையையே அதிரச் செய்தது அழைக்கும் (10)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!
Comments
Post a Comment