ஆவி அழைக்கிறது! பகுதி 12

ஆவி அழைக்கிறது!
                       பகுதி 12
                                     எழுதுபவர் “பிசாசு”

முன்கதை சுருக்கம்: ஆழ்வார் குறிச்சியில் உள்ள தன் பங்களாவை சீர்படுத்த முயலும் தனவேலுக்கு அவரின் பழைய காதலியான பொன்னம்மா எனும் ஆவி தொல்லைகள் தருகிறது.நம்பூதிரி கொடுத்த தாயத்தையும் அந்த ஆவி எடுத்துக்கொள்கிறது.
இனி 
  ஐயோ! அப்பா என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இப்படி கத்தறீங்க என்று பிடித்து உளுக்கினாள் நிதிலா. அப்போதுத்தான் தனவேலு சுயநினைவுக்கு வந்தார். ஓ..ஒண்ணுமில்லேம்மா. அந்த ஆவி என்னை பயமுறுத்திக்கிட்டே இருக்கு இப்ப என்னோட தாயத்தையும் அது எடுத்துகிடுச்சு அதான் தூக்கத்திலேயே சத்தம் போட்டிருக்கிறேன்.
  அப்பா நீங்க ரொம்ப பயந்து போயிருக்கீங்கன்னு நினைக்கிறேன். உங்க தாயத்து எங்க்கேயும் போகலை. அது இன்னும் உங்க கையிலதான் இருக்குது. என்று கையில் கட்டியிருந்த தாயத்தை காட்டினாள் நிதிலா.
  அப்போ அந்த பேய் அது கையில வச்சிருந்ததே அது...
 அதெல்லாம் உங்க கனவு அப்பா நீங்க சதா அந்த பேயைப் பத்தியே நினைச்சிகிட்டு இருப்பதாலே கனவு வந்திருக்கும்.
  அம்மா இது கனவு இல்லேம்மா நிஜம் அந்த உருவம் நேர்ல வந்து என்னை மிரட்டுது!
ஐயோ! அப்பா அப்ப நான் உங்க கூட படுத்திருந்தேனே என் கண்களுக்கு எந்த ஆவியும் தென்படலையே?
  அன்னிக்கு நீகூடத்தான் பங்களாவில எலும்புக்கூடு பேசுச்சின்னு சொன்ன?
அப்பா அது நிஜம்! அது நிஜம்னா நான் சொல்றதும் நிஜம்! கண்டிப்பா அந்த ஆவி என்னை பழிவாங்காம விடாதுன்னு நினைக்கிறேன்.நாலைக்கு முத வேளையா அந்த நம்ப்பூதிரியை போய் பாக்கணும்.
   அது ஏன் உங்களை பழிவாங்கணும். அந்த ஆவி வேற என்னோட முகமா தெரிஞ்சது அதுக்கு என்ன காரணம்? எனக்கு ரொம்பவே குழப்பமா இருக்கு!
 தனவேலு சங்கடத்தில் நெளிந்தார். சரி விட்டுத் தள்ளும்மா! ஆக வேண்டியதை பார்ப்போம்.
 நாளைக்கு நீயும் என்கூட நம்பூதிரி வீட்டுக்கு வர்றியா?
 இல்லேப்பா! நான் வரலை! எனக்கு அந்த நம்பூதிரியை கொஞ்சம் கூட பிடிக்கைலை அவனால எதுவும் செய்ய முடியாதுன்னு என் மனசுக்கு தோணுது. நம்மளை ஏமாத்தறானோன்னு கூட தோணுது நீங்க மட்டும் போய் வாங்க என்ற நிதிலா அப்பா ஏற்கனவே பாதி ராத்திரி தாண்டியாச்சு படுங்கப்பா மிச்சமீதியை நாளைக்கு பாத்துக்கலாம் என்று போர்வையை எடுத்து போர்த்திக்கொண்டாள்.
  தனவேலுக்கு சற்று நிம்மதியாக இருந்தது. நம்பூதிரி தனக்கு எல்லாம் தெரியும் என்று சொன்னானே? அவனிடம் சற்று பேசவேண்டும் நிதிலா வராமலிருக்க வேண்டும் என்று நினைத்தார் அதுபோலவே நிதிலாவும் வர மறுக்கவே அவருக்கு ஓர் அல்ப மகிழ்ச்சி. அதே மகிழ்ச்சியில் உறங்கிப்போனார்.
     இரவு நெடு நேரம் விழித்து இருந்ததாலேயோ என்னவோ தந்தை மகள் இருவரும் அசதியில் பொழுது விடிந்தும் உறங்கிக் கொண்டிருந்தனர். ஜன்னல் வழியாக கதிரவனின் கதிர்கள் வந்து தாக்கவும் முதலில் விழித்தவள் நிதிலா. சுவரில் இருந்த கடிகாரம் மணி எட்டை நெருங்கிக் கொண்டிருப்பதை காட்டியது.
 ராத்திரி அப்பா பண்ணிய கூத்தில் எழுந்திருக்க நேரமாகிவிட்டதே என்று புலம்பியவள் அப்பா எழுந்திருங்க பொழுது விடிஞ்சிடிச்சு எழுந்திருங்க என்று குரல் கொடுத்தாள். தனவேலும் எழுந்து அவசர அவசரமாக குளித்து விட்டு நம்பூதிரியை பார்க்க கிளம்பினார்.
  அதற்குள் நிதிலாவும் குளித்து முடித்து கையில் காபியுடன் நின்றிருந்தாள். இந்தாங்க என்று தனவேலிடம் காபியை தந்தாள் நிதிலா. அத்துடன் அப்பா நானும் உங்களோட வரட்டுமா? என்று கேட்டாள்.
   தனவேலு சட்டென நிமிர்ந்தார். வேண்டாம்மா! நீ இங்கேயே இரு நான் மட்டும் போயிட்டு வந்திடறேன். என்றவர் பதிலை கேட்க விரும்பாதவராய் கிளம்பினார்.
  காலை மணி 10 அடித்தது நிதிலாவுக்கு ‘போர்’ அடித்தது. அப்பா வர மதியம் ஆகிவிடும் அதுவரை என்ன செய்வது? சமையலுக்கு வேலையாட்கள் இருக்கிறார்கள் கொண்டு வந்த நாவல்கள் படித்து முடித்தாகிவிட்டது. டிவியோ சுத்த அறுவை! என்ன செய்யலாம். அப்படியே இந்த ஊரை சுற்றிப் பார்த்தால் என்ன?
   கதவைப் பூட்டி சாவியை முத்துவிடம் கொடுத்துவிட்டு வெளியே கிளம்பினாள் நிதிலா.
  கேசவன் நம்பூதிரியின் இல்லம். தனவேல் காத்திருந்தார். தன் முறை வந்ததும் உள்ளே நுழைந்தார் தனவேல். வாரும் முதலியார், வாரும் என்ன முகத்தில சவக்களை ஓடுது? என்ன ஆச்சு ஏன் இப்படி பயந்து போய் இருக்கீங்க? சிரித்தபடி கேட்டான் நம்பூதிரி.
 நம்பூதிரியாரே என் நிலைமை உங்களுக்கு சிரிப்பா இருக்கா? எல்லாம் தெரியும்னு சொன்னீங்க நேத்து ராத்திரி என்ன நடந்ததுன்னு உங்களுக்கு தெரியாதா? கோபத்துடன் கேட்டார் தனவேல்.
  நம்பூதிரி ஏதோ மனதில் முணுமுணுத்தவாறே கண்களை மூடினான். அவன் முகம் மிகவும் கொந்தளித்து கோரமாக காட்சி தந்தது. பின்னர் கண்களை திறந்தவன் அந்த பணிக்காரி பொன்னம்மையை நீர் ஏன் கைவிட்டீர்? அதோட இல்லாமல் அவளோட அண்ணன் காரணை எதுக்கு கொன்னீங்க? என்றான்.
  தனவேல் திடுக்கிட்டார். இ.. இது ஒ.. உங்களுக்கு எப்படி தெரியும்?
நம்பூதிரி கலகலவென சிரித்தான். இது என்னோட யட்சிணியாக்கும்! யான் உபாசிக்கும் ஒரு தேவதை! அது பறைஞ்சது அது கள்ளம் பறையாது. நீரும் என்கிட்ட கள்ளம் பறையண்டா! என்றான்.
    தனவேலுக்கு முகமெல்லாம் வியர்த்தது. சரி நான் சொல்லிடறேன். ஆனா அந்த ஆவி என்னை விடாது போலிருக்கே என்றார்
  அதை யான் பாத்துக்கும் நீர் இப்ப உண்மை பேசும் அந்த வேலைக்காரி பொன்னம்மாவோட பெண்ணைத்தானே நீர் வளர்ப்பது? என்றான்.
 தனவேல் சொல்ல ஆரம்பித்தார்.
   வெளியே கிளம்பிய நிதிலா அவ்வூரின் வயல் வெளிகளில் நடக்க ஆரம்பித்தாள். புற்கள் சூழ்ந்த அந்த வரப்புகளில் நடக்க அவள் தடுமாறினாள்.காலை வெயில் அப்போதுதான் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
  வயல்களில் அறுவடை நடந்து கொண்டிருக்க வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தவளின் கையை பின்னாலிருந்து பிடித்து இழுத்தது ஓர் ஆண்கரம். திடுக்கிட்டாள் நிதிலா. அழைக்கும் (12)

தங்கள் வருகைக்கு நன்றி ! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2