கலைஞருக்கு நன்றி!



கலைஞருக்கு நன்றி!

என்னடா இது! இவன் பிளாக்கை விழுந்து விழுந்து படிக்கிற நம்மளுக்கு நன்றி சொன்னாக் கூட பரவாயில்லை ஆனா கலைஞருக்கு நன்றி சொல்லி நம்ம வவுத்தெரிச்சலை கொட்டிக்கிறானேன்னு பாக்கறீங்களா? காரணத்தோடுதான் கலைஞருக்கு நன்றி சொல்லறேன்.
  சாதாரணமா நம்ம பிளாக் பேஜ் வியு ஒரு நாளைக்கு 50லிருந்து 75 இல்ல 100 போயிகிட்டு இருந்துச்சு. இந்த சமயத்துலதான் கலைஞரும் அவங்களோட உடன் பிறப்புகளும் தலைவர் யாருன்னு பொதுக்குழுவில போட்டி போட்டுகிட்டாங்க அத பத்தி காப்பி பேஸ்ட் நியுஸ்தான் நம்ம பிளாக்ல போட்டேன் அடேங்கப்பா நம்ம ஜனங்களுக்குத்தான் அடுத்த வீட்டு சண்டையில என்ன ஆர்வம் பேஜ் வியு ஒரு நாளைக்கு 200ஐயும் தாண்டிடுத்து ஒரு ரெண்டு மூணு நாளா!
  உண்மையில கட்சிக்குள்ள இப்படி அடிச்சுக்குற மாதிரி கலைஞர் தான் செட்டப் பண்ணறாம். தினம் ஒரு கைதுன்னு நில மோசடியில கழகக்கண்மணிகள் உள்ளே போறாங்க இல்லியா? அவங்க கட்சி நம்மளை கண்டுக்கவே இல்லையேன்னு வருத்தப்படறாங்களாம்! அவங்களை எல்லாம் பாக்க நேரம் இல்லை இங்க நாங்களே உதை பட்டுகொண்டு இருக்கிறோம்னு நியுஸ் விட்டு திசை திருப்பற முயற்சிதானாம் இந்த மோதல் நியுஸ்
  இதையும் இன்னிக்கு காலையில நியுஸ் பேப்பர்லதான் படிச்சேன் எப்படியோ என்னோட பிளாக் அலேக்ஸா ரேங்க்லயும் தமிழ் மணம் ரேங்க்லயும் கொஞ்சம் முன்னேற காரணமா இருந்த கருணாநிதிக்கும் அவங்க உடன்பிறப்புக்களுக்கும் நன்றி! நன்றி!

வழக்கமா ஞாயிற்றுக்கிழமையில டி வியில கொஞ்ச நேரம் ஏதாவது படம் பார்ப்பேன் முழுசா பாக்கமாட்டேன் இந்த வாரம் எங்க ஊர் திருவிழா நடந்ததாலே எதையும் பார்க்க முடியலை. நைட் 9.30 மணிக்கு விஜய் டி வி ல நீயா-நானா  பாதியில இருந்து பார்த்தேன். தங்க நகை அணிபவர்களுக்கும் மறுப்பவர்களுக்குமான போட்டா போட்டி சுவாரஸ்யமாக இருந்தது. அதை விட தங்க நகை அணிவதே அழகு என்று வாதிட்டவர்கள் போட்டிருந்த நகைகள் அப்பாடா! மலைக்க வைத்தது. யார் சொன்னது இந்தியா ஏழை நாடு என்று?
    நிகழ்ச்சியில் சில சுவாரஸ்யங்கள். என்னை உபயோகப்படுத்தி எனக்கு எனக்கு என்று சொல்லி தனக்கு நிறைய நகை வாங்கிக் கொள்கிறார் என் அம்மா  அதனால் எனகு தங்க நகை அணியப் பிடிக்காது என்று ஒரு பெண் அம்மா மீது குற்றம் சாட்ட, அம்மாவோ தான் அணிந்திருக்கும் எல்லாமும் பெண்ணுக்கே என சொல்லி,ஆனால் அவள் அணிய மறுக்கிறாள் என வாதாட, தொகுப்பாளர்  அம்மாவின் ஆசையை  நிறைவேற்றுமாறு பெண்ணிடம் சொல்லி அம்மாவை பெண்ணுக்கு அந்த மேடையிலேயே நகை அணிவிக்க வைத்து அழகு பார்த்தார் பின்னனியில் மாசறு பொன்னே வருக பாடலில் அந்த தாய் தன் மகளுக்கு நகை அணிவித்தபோது அவர் கண்களில் தெரிந்த மகிழ்ச்சி! அடடா என்றிருந்தது.
  இன்னொரு பெண்ணோ தான் ஒரு பொருள் கண்டு பிடித்துள்ளதாகவும் அதற்கு பேடண்ட் வாங்க வெளிநாடு போக செலவாகும் என்ற ஒரே காரணத்தால் அனுப்ப மறுக்கிறார்கள் ஆனால் லட்ச கணக்கில் நகை வாங்கி வைத்துள்ளார்கள் என்று முறையிட்டார். ஒரு சிறு விவாதத்த்ற்கு பின் அந்த பெண்ணை வெளிநாடு செல்ல அனுமதிப்பதாக அந்த தாய் கூற அப்பெண்ணின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்கு பொன்னகை ஈடாகாது.
   இன்னொரு பெண்மணி தங்க நகை ஒரு பெண்ணின் வாழ்வையே வீணாக்கி உயிர் பலி வாங்கியதால் தானும் தன் கணவரும் தங்க நகை அணிவதில்லை தங்கள் பெண்களுக்கும் வாங்குவதில்லை 30 வருடங்களாக என்ற போது கைதட்டல் அதிகமாக விழுந்தது.
 இப்படி ஒரு அருமையான விவாத நிகழ்ச்சியை முழுதும் பார்க்க என்னால் முடியவில்லை உறக்கம் கண்ணைத்தள்ள தூங்கிவிட்டேன்.
   இந்த பிளாக் எழுத ஆரம்பித்த போது எனக்கு ஒன்றும் தெரியவில்லை. பின்னர் பிளாக்கர் நண்பன் தளத்திற்கு எதேச்சையாக சென்று பல்வேறு நிரலிகளின் ஓட்டுப் பட்டைகளையும் லிங்குகளையும் இணைத்தேன் அது ஒன்றும் அத்தனை சுலபமாக இருக்க வில்லை இன்னும் கூட தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இணைக்க முடியவில்லை. அப்பொழுது எனக்கு ஃபாலோயர்ஸ் யாருமில்லாமல் இருந்தால் எப்படி என்று என் மனைவி, மற்றும் நானெ இன்னொரு ஐடியில் இரண்டு ஃபாலோயர்ஸ் என மொத்தம் மூன்று ஃபாலொயர்ஸ் என அமைத்தேன் இன்று எனக்கு அந்த மூன்று ஃபாலோயர்ஸ் தவிர்த்து 21 பேர் என்னுடைய எழுத்துக்களை படிக்கிறார்கள் அது தவிர இண்ட்லியிலும் தமிழ்  10லிம் சிலர் என்னை பின் பற்றுகிறார்கள் தமிழ் மணம் ரேங்க் மே மாத கடைசியில் இணைத்தபோது 1050 ஆக இருந்தேன் இப்பொழுது இந்த இரண்டரை மாதத்தில் 725 ஆக குறைந்துள்ளேன். அலேக்ஸா ரேங்கிலும் 16லட்சத்திலிருந்து 2 லட்சமாக குறைந்துள்ளேன்.
  இதற்கெல்லாம் காரணமான எனது ஃபாலோயர்ஸ்களுக்கும் வாசகர்களுக்கும் எனது அறுவைகளை சகித்துக்கொண்டமைக்கும் வாக்கிட்டமைக்கும் எனது நன்றியை தெரிவித்து  விடை பெறுகிறேன் நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!