தயாநிதி கல்தா உறுதி! சி.பி.ஐ திடுக்கிடும் ரிப்போர்ட்!

 தயாநிதி கல்தா உறுதி! சி.பி.ஐ திடுக்கிடும் ரிப்போர்ட்!

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி மாறன் வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையை சிபிஐ இன்று ஏற்படுத்தியுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தயாநிதி மாறனையும் தங்கள் விசாரணை வளையத்துக்குள் வைத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தெரிவித்தது.
ஸ்பெக்டரம் ஊழல் தொடர்பான புலன் விசாரணையில் இதுவரை என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தாக்கல் செய்தது. அதில் தயாநிதி மாறனுக்கு எதிரான புகார் குறித்து தாங்கள் விசாரித்து வருவது பற்றியும் குறிப்பிட்டுள்ளது. தாம் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரனை நிர்பந்தம் செய்து அவரது பெரும்பகுதி பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மாக்சிஸ் என்ற நிறுவனத்துக்கு விற்கும்படி தயாநிதி மாறன் செய்துள்ளார். மலேசியாவைச் சேர்ந்த அந்த நிறுவனம் தயாநிதி மாறனின் நண்பருக்குச் சொந்தமானது என்று சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணையை விரைவில் முடிக்கும்படி உச்ச நீதிமன்றம் கூறியது. இன்னும் மூன்று மாதத்துக்குள், அதாவது ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் இது பற்றிய புலனாய்வு முடிந்து விடும். இப்போது ஸ்பெக்டரம் விவகாரத்தில் கைமாறிய லஞ்சப் பணம் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட பிற கம்பெனிகள் குறித்து விசாரித்து வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியில் நீடிக்கலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்,. அவர் ராஜிநாமா செய்யாவிடில் பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் குறிபிட்டுள்ளார்.

ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் வழங்க தயாநிதி வேண்டுமென்றே தாமதம் செய்ததாகவும் இதனால் அவரது சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் குழுமம் ரூ. 750 கோடி அளவுக்கு பலன் அடைந்ததாகவும்  திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
தனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் டிவி குழுமம்  பலன் அடைய வேண்டும் என்பதற்காக  ஏர்செல் நிறுவனத்தை தயாநிதி மாறன் குறிவைத்தார் என்று அவரது முன்னாள் செயலர் நிருபேந்திர மிஸ்ரா சிபிஐயிடம் தெரிவித்துள்ளதாக சிஎன்என்-ஐபிஎன் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான சிபிஐ விசாரணையில் மிஸ்ரா முக்கிய சாட்சியாக உள்ளார். சிவசங்கரன் உரிமையாளராக இருந்தபோது ஏர்செல்லுக்கு உரிமம் வழங்குவதை தயாநிதி மாறன் நிறுத்திவைத்தார் என்று மிஸ்ரா சிபிஐயிடம் தெரிவித்துள்ளார்.
ஏர்செல்லின் துணை நிறுவனங்கள் குறித்தும், ஏர்செல் நிறுவனம் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்திகள் குறித்தும் அவசியமே இல்லாமல் வேண்டுமென்றே தயாநிதி மாறன் கேள்விகளை எழுப்பியதாக மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
தயாநிதியின் இந்த தந்திரங்கள் காரணமாக ரூ 750 கோடி அளவுக்கு தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் பலனடைந்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி  தமிழ் இந்தியா.காம்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துசெல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2