நான் ரசித்த பூக்கள்!

நான் ரசித்த பூக்கள்! 
  படித்து ரசித்த இரண்டு குட்டிக்கதைகள்.
  இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெற்றிச்செல்வராக விளங்கியவர் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சில்’
   ஒரு சமயம் “நான்ஸி” என்ற அழகி சர்ச்சிலை சந்தித்தபோது “நான் உங்களது மணைவியாக இருந்தால் நீங்கள் குடிக்கிற காபியில் நான் விஷத்தை கலந்து கொடுத்துவிடுவேன்!” என்று நகைச்சுவையாக சொன்னாள். மறுவினாடியே சர்ச்சில் “கடகட” வென தமக்கே உரித்தான் பெருமித சிரிப்புடன் பதில் அளித்தார்.
   “நான் மட்டும் உன் கணவராக இருந்திருந்தால் அந்தவிஷத்தை நீ தராமலேயே நானே குடித்திருப்பேன்.”
   அதைக்கேட்ட அழகி பேச முடியாமல் அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

 
  நெத்தியடி!
ஒரு கணவன் மனைவி குடும்பம். அன்பான குடும்பம்தான். ஆனால் கணவனுக்கொ சூதாடும் பழக்கம் தொற்றிக்கொண்டது. அதை விட அவன் தயாரில்லை. இதனால் இருவருக்கும் சதா சண்டை.மனைவி சொன்னாள் சூதாடுவது கெட்டப்பழக்கம் என்று!
   கணவனோ மறுத்தான். சூதாடுவது கெட்டப்பழக்கம் கிடையாது.மகா பாரதத்திலேயே பஞ்சபாண்டவர்கள் பாஞ்சாலியை வைத்து சூதாடி இருக்கிறார்கள் என்றான்.  
   மனைவி சொன்னாள். பாரதத்தில் பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள் அதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்! இனி அவன் சூதாடுவான்?

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை எழுதலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!
 

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2