சுட்டதை பார்த்துட்டேன்!

சுட்டதை பார்த்துட்டேன்!

“டேய் ரவி என்னையே ஏமாத்த பாக்காதே என் கழுகுப்பார்வையிலிருந்து எதுவும் தப்பாது. மரியாதையா உண்மைய ஒத்துக்கிட்டு பணத்த கொடுத்துடு”
 “போடா மடையா அப்படி என்னத்த பாத்துகிழிச்சடா?நான் எதுக்கு பணம் தரனும்? அதெல்லாம் முடியாது அதுக்கு வேற ஆளப்பாரு!”
 “ டேய் உன் வண்டவாளம் தண்ட வாளம் ஏறிடும் அப்புறம் மானம் மரியாதை எல்லாம் போயி தலை கவிழ்ந்துகிட்டு நிப்பே என்கிட்ட விளையாடாதே!”
 “ஆமாம் இவரு சச்சினு இவருகூட விளையாடறாங்க போடா”
“ஏய் வெறுப்பேத்தாதா ஆமா சொல்லிட்டேன் அப்புறம் நீ கஷ்டப்பட வேண்டியிருக்கும் சொல்லிபுட்டேன்”
‘போடா இவனே நான் ஏண்டா கஷ்டப்படணும் என்கிட்ட கெஞ்சாம போயி பொழைக்கிற வேலையா பாப்பியா?”
  “எதோ அண்ணனா போயிட்டேன்னு பார்த்தா  இப்ப என்கிட்டேயேவா?”

“என்னடா உன்கிட்டே ரொம்ப ரோதனையா போச்சு! அப்படி என்னத்தடா பாத்து தொலைச்சே?” என்கிட்டயே பிளாக் மெயில் பண்ற அளவுக்கு!
  “ஏய் நடிக்காதடா! எல்லாம் எனக்குத்தெரியும்.நீ சுட்டதை நான் பார்த்துட்டேன் மரியாதையா நான் சொல்றபடி கேளு இல்ல!”
“சே என்ன மடத்தனம் ! எவ்வள்வு துல்லியமாக ஒருவருக்கும் தெரியாமல் காய்களை நகர்த்தி திட்டம் தீட்டி ஒருவாரமாய் காத்திருந்து சுட்டோம் இவன் எப்படி பார்த்தான்? ச்சே வசமாக மாட்டிக் கொண்டோமே என்ன கேட்க போறானோ தெரியலியே!”
“ என்னடா முழிக்கற! பெரிய மனுசனா நீ! உத்தமன் போல நடிக்கற! நீ நேத்து அப்பா பீரோவிலிருந்து ஐநூறு ரூபாய் சுட்டதை இந்த ரெண்டு கண்ணால பாத்திருக்கேன் மரியாதையா பாதியை எனக்கு வெட்டு இல்லே விஷயம் யார் காதுக்கு போகனுமோ அங்க போயிடும்”
“ சின்ன வயசில் ஆரம்பிச்ச பழக்கம் விட முடியலடா இந்தா எடுத்துன்னு தொலை என்று 250 ரூபாயை விட்டெறிந்தேன்.
 “அது..!” என்றபடி காசை பொறுக்கிகொண்டு விசிலடித்தபடி சென்றான் தம்பி.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே கமெண்ட்ஸ் பகுதியில்! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச்செல்லலாமே!Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2