சென்னை திரும்புகிறார் ரஜினி!

 சென்னை திரும்புகிறார் ரஜினி!

சென்னை: ரஜினி சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்புவதையொட்டி விமான நிலையம், கிண்டி, அண்ணாசாலை மற்றும் போயஸ் கார்டன் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ரசிகர்கள் கட்டுப்பாட்டுடன், மேற் குறிப்பிட்ட இடங்களில் நின்று அவருக்கு வரவேற்பளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரஜினியைப் பார்க்கவும் அவரை வரவேற்கவும் சென்னை வரும் ரசிகர்கள், பாதுகாப்பு கருதி தனி வாகனங்களில் வராமல், அரசு பஸ்கள் அல்லது ரயில்களில் மட்டும் வருமாறு லதா ரஜினி கேட்டுக் கொண்டுள்ளார்.

புதன்கிழமை இரவு 10.30 மணிக்கு வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரஜினியும் அவரது குடும்பத்தினரும் வருகிறார்கள்.

முதலில் அவர், விமான நிலையத்திலிருந்து நேராக கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்குச் செல்வார் என்றும் அங்கு அவர் ஒருமாத காலம் ஓய்வு எடுப்பார் என்றும் தெரிவித்தனர்.

இப்போது, ரஜினி நேராக போயஸ் வீட்டுக்கே செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இதற்கான விசேஷ ஏற்பாடுகள் நடக்கின்றன. ரஜினி வீடு திரும்புவதையொட்டி விசேஷ ஹோமங்களும் நடத்தப்படுகின்றன.

ரஜினி வருகையையொட்டி ரசிகர்களுக்கு லதா ரஜினி விடுத்துள்ள செய்தி:

என் கணவர் ரஜினி மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் அன்புக்கும் பாசத்துக்கும் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. ரஜினி அவர்கள் நாளை இரவு 10.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இறங்குகிறார்.

அவரைப் பார்க்க வரும் ரசிகர்கள் பொறுமையுடன் நடந்துகொள்ளவும். அதே நேரம் வெளியூர்களிலிருந்து வரும் ரசிகர்கள் தனி வாகனங்கள் வைத்துக் கொண்டு வருவதைத் தவிர்க்கவும். தேவையற்ற ஆபத்துக்களைத் தவிர்க்க, தயவு செய்து அரசு பேருந்துகள், ரயில்களில் வரவும்.

ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்."

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2