ஸ்டாலின் கைதாகி விடுவிப்பு! பரபரப்பு தகவல்கள்!
சென்னை: ஸ்டாலின் கைதான சம்பவம் திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசின் தேவையற்ற இந்த செயலைக் கண்டித்தும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திமுகவினர் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்டாலின் கைது செய்யப்பட்ட திருவாரூர் மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டங்களான திருச்சி, தஞ்சை மற்றும் நாகையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலும் திமுக ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான எவ வேலு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் நடந்து வருகிறது.
இன்று அதிகாலை திடீரென்று வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதால் சேலம் மாவட்டத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது. பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாமக்கல், திருச்செங்கோட்டிலும் சாலை மறியல் நடந்து வருகிறது.
சென்னையில்...
தலைநகர் சென்னையின் பிரதான பகுதியான அண்ணா சாலை மற்றும் வட சென்னைப் பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள் நடந்தன. போராட்டத்துக்கு மாநகராட்சி மேயர் மா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூரில் சாலை மறியல் செய்ததையடுத்து இன்று காலை கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் மதியம் 2 மணி வாக்கில் விடுவிக்கப்பட்டார். ஸ்டாலினுடன் வந்த பழனிமாணிக்கம் உள்ளிட்ட திமுக தலைவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்பி, ஸ்டாலினை நாங்கள் கைது செய்யவில்லை. மாணவர் ஒருவர் விபத்தில் இறப்பதற்குக் காரணமான சம்பவம் தொடர்பாக மாவட்ட திமுக செயலர் பூண்டி கலைவாணனிடம் விசாரணை நடத்த வந்தோம்; அவரை ஒப்படையுங்கள் என்றோம். அதற்கு ஸ்டாலின் தரப்பு மறுத்ததுடன் தானாகவே சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கைதாகினர். அவர்களை பாதுகாப்பாக திருவாரூர் அழைத்து வந்தோம். தற்போது, கலைவாணனை மட்டும் விசாரணைக்கு நிறுத்தி வைத்து, மற்றவர்களை விடுவித்துவிட்டோம் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து, கலைவாணனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.
வீரபாண்டி ஆறுமுகம், ஜெ.அன்பழகன் உள்ளிட்ட திமுகவினருடன் இன்று காலை ஸ்டாலினும்கைதானதாக வந்த தகவல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் திமுகவினர் ஸ்டாலின் கைதைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். கருணாநிதியும் கண்டன அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார். ஸ்டாலின் உள்ளிட்டோர் தாமாக முன்வந்து கைது நாடகம் நடத்தியுள்ளனர் என மாவட்ட எஸ்பி கூறினார்..
நன்றி தட்ஸ் தமிழ், தமிழ் இந்தியா.காம்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்தினை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!
Comments
Post a Comment