பாப்பா மலர்! எறும்புகளும் சிலந்தியும்!
எறும்புகளும் சிலந்தியும்!
அந்த வீட்டின் மூலையில் சிலந்தி ஒன்று வலை பின்னிக்கொண்டிருந்தது. அதே வீட்டில் சில எறும்புகள் கீழே இறைந்து கிடந்த தானியங்களை சேகரிப்பதில் மும்முரமாய் இருந்தன. வலை பின்னிக்கொண்டிருந்த சிலந்தி இதை கவனித்தது.
அது எறும்புகளை நோக்கி சொன்னது, ஏய் எறும்புகளே! ஏன் இங்கும் அங்கும் அலைந்து இரைக்கு அல்லாடுகிறிர்கள்? என்னைப் பார்த்தீர்களா? அழகாக வலை பின்னியுள்ளேன். இதில் தானாக வந்து மாட்டும் இரையை சுகமாக உண்டு ஜீவிக்கிறேன்.உங்களை பார்த்தால் மிகவும் பரிதாபமாக உள்ளது. என்று கேலியாக பேசியது.
அப்போது ஓர் எறும்புசிலந்திக்கு பதில் சொன்னது, ஏய் சிலந்தியே நீ பின்னும் வலை உனக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். ஆனால் இந்த அழகான வீட்டில் நீ வலை பின்னியிருப்பது இந்த வீட்டிற்கு அசிங்கமே! அதோடு மட்டுமில்லாமல் தெரியாமல் உன் வலையில் வந்து மாட்டிக்கொள்ளும் அப்பாவி ஜீவன்களை கொல்வது ஈனச்செயல். உழைக்காமல் உண்டால் எந்த உணவும் செரிக்காது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னது.
அதிக்கேட்ட சிலந்தி வெட்கி தலை குனிந்தது. எறும்புகள் மகிழ்சியாக இரை தேடத்துவங்கின.
தங்கள் வருகைக்கு நன்றி ! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிவிடலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!
Comments
Post a Comment