ஜெயலலிதாவுடன் இணைந்து குரல் கொடுப்போம்! வைகோ!


திருநெல்வேலி: மத்திய அரசின் புதிய அணை மசோதாவை எதிர்த்து அனைத்து கட்சிகளு்ம் போராட வேண்டும். இந்த விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுப்பியுள்ள குரலுடன் இணைந்து அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

நெல்லையில் வரும் செப்டம்பர் 15ம் தேதி மதிமுக தென்மண்டல மாநாடு நடக்க உள்ளது. இது தொடர்பாக நெல்லை புறநகர், மாநகர், விருதுநகர், தூத்துக்குடி, குமரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளை, நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேசியதாவது,

சென்னை அல்லாத வெளியூரில் முதல் முறையாக நெல்லையில் அண்ணா பிறந்த நாள் விழா நடத்தப்ப்ட்டது. அப்போது திமுகவுக்கு புதிய உந்துதல் கிடைத்தது. அதுபோல் தென்மண்டல மாநாடு மதிமுகவுக்கு உந்துதல் தரும். சூழ்நிலைக்கு தகுந்தவாறு வேஷம் போடும் பழக்கம் மதிமுகவுக்கு கிடையாது.

மதிமுக, தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் போராடி வருகிறது. ஆனால் இன்று விடுதலை புலிகளை பற்றி பேசாமல் யாராலும் இருக்க முடியாது என்ற சூழ்நிலை உள்ளது. பிரசல்சில் நடந்த 2 நாள் மாநாட்டில் பங்கேற்று இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து விரிவாக பேசினேன்.

இலங்கையில் தனி ஈழம் அமைய உலகில் பல்வேறு பகுதிகளில் அகதிகளாக இருக்கும் தமிழக மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த .நா. ஏற்பாடு செய்ய வேண்டும். கிழக்கு தைமூர், தெற்கு சூடான் போன்ற நாடுகள் வாக்கெடுப்பு மூலமே தனி நாடுகளாக உருவாகியுள்ளது. அதுபோல் தனி ஈழம் உருவாதன் மூலம் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.

சுதந்திர தமிழ் ஈழம் விரைவில் மலருவது நிச்சயம். அன்று முதல் இன்று வரை விடுதலை புலிகலை மதிமுக ஆதரித்து வருகிறது. இந்த கூட்டம் எதற்கும் அஞ்சாத கூட்டமாகும். இனப்படுகொலை செய்த ராஜபக்சே, மற்றும் அவரது கூட்டாளிகளை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.

கருப்பர் இன மக்கள், ஓடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் தங்களது உரிமைக்காக போராடுகின்றனர். அதுபோல் இலங்கை தமிழர்கள் தனி ஈழத்திற்காக போராடுகின்றனர். சுதந்திர தமீழ தேசம் அமைய வெளிப்படையான வாக்கெடுப்பு அவசியமாகும்.

மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு, பராமரிப்பது போன்ற பணிகளை அந்தந்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவை கொண்டு வர உள்ளது.
இந்த சட்டம் இந்திய ஒருமைப்பாட்டிற்கு வேட்டுவைக்க கூடியதாகும்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை காலில் போட்டு மிதித்துவிட்டு, கேரள அரசு தங்கள் மாநிலத்தில் உள்ள அணைகளைபராமரிக்கவும், உடைக்கவும் உரிமை உள்ளது என அக்கிரமமான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

அத்தகைய சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு மாறாக கேரள அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு வலுவூட்டும் வகையில் டெல்லியில் மத்திய பணியில் உள்ள கேரளத்தை சேர்ந்த அதிகாரிகள் வஞ்சமாக நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்கள்.

இதனை எதிர்த்து தமிழக முதல்வர் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கை வரவேற்கத்தக்கது. இந்த பிரச்னையில் மொத்த தமிழகமும் ஒரு குரலாக எழவேண்டும். இத்தகைய அநீதியான சட்டத்தை நிறைவேற்ற விடக்கூடாது. சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைவரும் முதல்வரின் குரலுடன் ஒன்றுபட்டு குரல் எழுப்பவேண்டும் என்றார் அவர்
நன்றி தட்ஸ் தமிழ்!

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

  1. தவறு செய்யும் போது தட்டிக் கேட்பதும் நல்லதுக்குத் தோள் கொடுப்பதுமாக நாட்டு நலன் தேடும் ஒருவர்தான் வள்ளுவர் கூறிய ”இடிப்பாரை இல்லா”.அந்த சொல் வை.கோ.வுக்குப் பொருந்தும்

    ReplyDelete
  2. எத்தனை தடவை மூக்கு உடைபட்டாலும் இவனுக்கு சொரணையே கிடையாதோ?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2