நல்லா சொல்றாங்கப்பா டீடெய்லு! இலங்கைக்கு விலை போன பாடகர்கள்திரைக்குப் பின்னால் படு ஜோராகவே நடிப்பவர்கள் சினிமாக்காரர்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.

சிங்கள ராணுவத்தால் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதை சற்றுத் தாமதமாக உணர்ந்து உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது. இலங்கையை போர்க்குற்றவாளிப் பட்டியலில் சேர்த்துள்ளனர் உலக மக்கள். குறிப்பாக ராஜபக்சே எந்த நேரமும் சர்வதேச நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிற்கும் நேரம் நெருங்கி வருகிறது.

ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இலங்கைக்கு நடிகர்-நடிகைகள் செல்லக்கூடாது என திரைப்பட கூட்டுக்குழு ஏற்கனவே தடை விதித்துள்ளது. நடிகர் சங்கமும் இந்தத் தடையை வலியுறுத்தி வருகிறது. சீமானின் நாம் தமிழர் இயக்கம் இதுகுறித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.

இவை எல்லாம் தெரிந்த பிறகும், 'போர்க்குற்றவாளி' ராஜபக்சேவுக்கு ஆதரவாக ஆடிப் பாடி தேர்தல் பிரச்சாரம் பண்ணத்தான் மனோ, பாடகி சுசித்ரா, கிரிஷ் உள்ளிட்டோர் சில தினங்களுக்கு முன் ரகசியமாக இலங்கைக்குப் போனார்கள்.

இவர்களின் கெட்ட நேரம், இந்தப் பயணம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. வைகோ மற்றும் நெடுமாறன் இருவரும் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்தனர். நடிகர் சங்கமும் உடனே நாடு திரும்புமாறு இவர்களுக்கு செய்தி அனுப்பியது.

ராஜபக்சே தரும் பணத்துக்காக இலங்கைக்கு இவர்கள் மேற்கொண்ட திருட்டுப் பயணம் அம்பலமாகிவிட்டதால், அவமானப்பட்டு நிற்கிறார்கள் மனோ உள்ளிட்ட அத்தனை பேரும்.

இப்போது இழந்துவிட்ட பெயரை எப்படியாது மீட்க, தங்களுக்குத் தோன்றிய பொய்களை அவிழ்த்துவிட்டவண்ணம் உள்ளனர்.

இதில் பாடகி சுசித்ரா சொல்லியிருப்பதுதான் உச்சகட்ட காமெடி. இலங்கையில் தேர்தல் நடப்பதே தெரியாது என்றும், பணத்துக்காக இலங்கைக்குப் போகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் கூறியிருப்பதைப் பாருங்கள்:

"
எங்களை விளையாட்டு மைதான பூமி பூஜைக்காக சொல்லித்தான் இலங்கைக்கு அழைத்தனர். அரசியல் தொடர்புள்ள நிகழ்ச்சியா என்று விசாரித்தோம். இல்லை என்றனர். அதன் பிறகு இலங்கை புறப்பட்டுச் சென்றோம்.

கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியதும் ராஜபக்சேவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வதற்கு நாங்கள் வந்திருப்பதாக லோக்கல் தமிழ் டி.வி. சேனலில் செய்தி சொன்னார்கள். அதை பார்த்ததும் அதிர்ச்சியானோம். அதன் பிறகுதான் அங்கு தேர்தல் நடப்பதே எங்களுக்கு தெரிந்தது (உலக மகா நடிப்புடா சாமி!).

மனோ உடனடியாக சென்னைக்கு தொடர்பு கொண்டு நடிகர் சங்க நிர்வாகிகளிடம் பேசி என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டார். அவர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பும்படி கூறினர். நாங்களும் வந்து விட்டோம். இலங்கைக்கு எங்களை ஏமாற்றி அழைத்து போய் விட்டார்கள்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் உணர்வுபூர்வமாக நான் ஒன்றி இருக்கிறேன். இலங்கையில் தமிழர்கள் பட்ட கஷ்டங்கள் மனதை ரொம்ப பாதித்தது. இலங்கைக்கு பணத்துக்காக நாங்கள் போகவில்லை. எங்களை அழைத்தவர்களிடம் ஒரு காசுகூட வாங்காமல் திரும்பி விட்டோம்," என்று கூறியுள்ளார் சுசித்ரா.

பலே மனோ...

இனப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வரை இலங்கைக்கே போகக் கூடாது என தமிழ் உணர்வாளர்கள் கூறிவரும் நேரத்தில், இனி பல முறை யோசித்துவிட்டே இலங்கை செல்வேன் என்று கூறியுள்ளார் மனோ.

அவர் கூறுகையில், "நாங்கள் பாடகர்கள் இலங்கையில் தமிழர்கள் உள்ளனர். அவர்களை சந்தோஷப்படுத்தும் நோக்கத்திலேயே அங்கு சென்றோம். பணத்துக்காக செல்லவில்லை. அதில் அரசியல் இருப்பது தெரிந்ததும் அதிர்ச்சியனோம். இனி இலங்கை செல்ல பல தடவை யோசிப்போம்," என்றார்.

விளையாட்டரங்க பூமி பூஜைக்கு சென்றோம் என்ற இவர்களின் வாதத்தை ஏற்றாலும் கூட, அது தமிழர் நிகழ்ச்சியல்லவே. இலங்கை அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சி. ராஜபக்சே கலந்து கொள்கிறார் என்று வேறு அழைப்பிதழ் தந்திருக்கிறார்கள். இதெல்லாம் தெரிந்த பிறகுதானே இவர்கள் தேதி கொடுத்து, அட்வான்ஸ் வாங்கி கொழும்பு புறப்பட்டார்கள். அதுவும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அல்லவா இந்தப் பயணத்தை செய்திருக்கிறார்கள்.

"
இப்போ நாம இலங்கை போறது மட்டும் தெரிஞ்சா, கறுப்புக் கொடியோட சீமான் எதிர்ல வந்து நிப்பாரு' என்று விமான நிலையத்தில் இவர்கள் கமெண்ட் அடித்துச் சிரித்துள்ளனர். ஆகவே, தெரியாமல் போய்விட்டோம் என்பதோ, ஏமாத்தி கூட்டிட்டுப் போயிட்டாங்க என இவர்கள் கூறுவதோ உண்மையல்ல.

ராஜபக்சே நிகழ்ச்சி இது எனத் தெரிந்தே இவர்கள் பயணம் மேற்கொண்டனர். அதற்கு ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இப்போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டதும் ஆயிரம் பொய்க் காரணங்களை அடுக்க ஆரம்பித்துள்ளனர்!", என்கிறார் தமிழ் உணர்வாளரான அந்த நடிகர்.

நன்றி தட்ஸ் தமிழ்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2