வெட்க கேடு!
வெட்க கேடு!
ஒரு காலத்தில் அரசியல் வாதிகள் தூய்மையானவர்களாக இருந்தார்கள் அரசியலும் தூய்மையாக இருந்தது. அரசியல் வாதிகளுக்கு மக்கள் மேல் பயம் இருந்தது. அதனால் ஆட்சியும் நல்ல முறையில் நடந்தது. என்று தமிழக மக்கள் பேச்சுக்கும் கவர்ச்சிக்கும் மயங்கி திராவிட கட்சிகளை மாறி மாறி தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார்களோ அன்றே தமிழகத்திற்கு பிடித்தது சனி. தமிழகம் மட்டுமல்ல மற்றகட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட இன்று மக்களுக்கு மதிப்பில்லை. அரசியல் வாதிகள் பதவிக்கு வருவதே சம்பாதிக்கத்தான் என்று ஆகிப்போனது நமக்கெல்லாம் வருத்தமான விஷயம்தான்.
சரி விஷயத்திற்கு வருவோம் என்னசார் ரெண்டு வாரமா உங்களோட அரசியல் பதிவுகளை காணோம் உங்க பிளாக் உப்பு சப்பில்லாம இருக்குது என்று யாரும் கருத்து சொல்லவில்லைதான். இருந்தாலும் எனக்கே போரடித்து போய் இந்த பதிவு எழுதுகிறேன்.
இன்றைக்கு பரபரப்பு நம்ம தயாநிதிதான். பியுட்டி பார்லரும் பாரும் நடத்திக் கொண்டிருந்தவரை பாரதத்தின் தொலை தொடர்புத் துறை அமைச்சராக்கி அழகுபார்த்த பெருமை தாத்தா கருணாநிதியை தவிர வேறு யாருக்கும் கிடையாது. பதவி எங்கல் கால் தூசு மானம் தான் பெரிது என்று வாய் ஜாலமாக பேசவும் எழுதவும் செய்வார் தாத்தா. பேரனும் அவர் வழியே இன்று தன் மீது சி.பி.ஐ குற்றம் சாட்டிய பின்னரும் தன் அமைச்சர் பதவியை துறக்க தயாரில்லை.
ஒரு காலத்தில் அரியலூர் ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று தனது அமைச்சர் பதவியை துறந்தார் லால் பகதூர் சாஸ்திரி. இன்று அதே காங்கிரஸ் ஆட்சியில் தான் கல்மாடிகளும் ராஜாக்கலும் தயாநிதிகளும் பங்கேற்றுள்ளனர். இவர்களை நீக்க இன்னும் பிரதமர் தயங்குவது ஏன்?
ஸ்பெக்ட்ரம் ஊழல் கிளம்பிய போதே தயாநிதிக்கு அதில் பங்குண்டு என்று அரசல் புரசலாக புகைய ஆரம்பித்தபோதே அவர் தனது பதவியை துறந்திருக்க வேண்டாமா? போகட்டும் ஏர்செல் சிவசங்கரன் வாக்குமூலமலித்த பின்னும் அவரும் விலக விரும்பவில்லை பிரதமரும் நடவடிக்கை எடுக்க வில்லை. இன்று சி.பி.ஐ நீதி மன்றத்தில் பகிரங்கமாக தயாநிதி மீது குற்றம் சாட்டிய பின்னும் இது வரை இல்லை நீதி.
ஆனால் மாறன் குடும்பத்தில் இதையெல்லாம் எதிர் பார்க்க முடியாதுதான். முரசொலி மாறன் உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாய் இருந்த போது கூட செயல்படாத அமைச்சராக பி.ஜே.பி அமைச்சரவையில் ஒரு வருடத்திற்கு ஒட்டிக் கொண்டிருந்தவராயிற்றே? என்ன வேட்க கேடு இது! மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் வீணாகிறது பாருங்கள். தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாகி உதவுவேன் என்பார் கலைஞர் தாத்தா. எதுக்கு என்று இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.
ஆண்ட அஞ்சு வருடத்தில் இவ்வளவு சம்பாதித்து வைத்துள்ளார்கள் இன்னு கொஞ்சநாள் இவர்களிடம் ஆட்சி இருந்திருந்தால் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவையே விலை பேசி இருப்பார்கள். என் பெண் ஒன்றும் அறியாதவள் என்று இன்று புலம்பும் கருணாநிதி அன்று ஒன்றும் தெரியாதவலுக்கு ஏன் எம்.பி பதவி கொடுத்தார்.
மருமகன் குடும்பமே கொள்ளையடித்துக்கொண்டிருந்தால் எப்படி துணைவி குடும்பமும் பிழைத்துப் போகட்டுமென்றா? இவர்களை எல்லாம் தேர்ந்தெடுத்து ஆட்சி பொறுப்புக்கு அனுப்பும் மக்களை என்ன சொல்ல? மந்திரி என்றதும் பின் வழியில் லைசென்ஸ் பெற பணம் கொடுக்கும் பிசினஸ் மேன்களை என்ன சொல்ல?
இவர்களை கெடுப்பது நாம் தானே! இப்பொழுதுதான் விழித்து கொள்ள ஆரம்பித்திருக்கிறோம் முழு விடியல் என்றைக்கோ? தெரியவில்லை. இன்னும் பதவியை விட்டிறங்காத தயாநிதியை குறை சொல்லும் முன் இந்த அளவுக்கு குறை படிந்த ஒருவரை அமைச்சராக வைத்துக்கொண்டு நான் ஒன்றும் செயல் படாதா பிரதமர் அல்ல என்று தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் சிங் தாத்தாவை என்ன சொல்வது. நிதி துறை அதிகாரியாக இருந்த அவருக்கும் இன்று பிரதமராக இருக்கும் அவருக்கும் எவ்வளவோ வித்தியாசங்கள்! மொத்தத்தில் பதவி ஆசை அவரையும் விடவில்லை. ஒரு கறை படிந்த அரசு நம்மை கட்டி ஆள்கிறது என்று சொல்ல நமக்கும் வெட்கமில்லை!
என்ன செய்வது அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியேதானே! ஒரு கதை சொல்வார்கள் அந்த காலத்தில் யாரும் வெளியே உணவருந்த மாட்டார்களாம் ஏனெனில் அந்த உணவின் பாதிப்பு நமக்கு வந்துவிடுமாம் உதாரணத்திற்கு திருட்டு அரிசியை ஒருவன் சமைத்து நமக்கு போட்டால் உண்ட நமக்கும் திருட தோன்றுமாம். இந்த கதை தான் இன்று நடக்கிறது. அதிகாரி தவறு செய்தால் அவனுக்கு கீழுள்ளவன் செய்ய மாட்டானா? மந்திரி தவறு செய்தால் மக்கள் செய்ய மாட்டார்களா? மொத்தத்தில் இன்றைய ஜனநாயகம் வெறும் பண நாயகம்! வெட்கக் கேடு விளங்கிடும் இந்தியா!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!
Comments
Post a Comment