ஆவி அழைக்கிறது! பகுதி 9


ஆவி அழைக்கிறது! பகுதி 9
                            எழுதுபவர் “பிசாசு”

முன்கதைசுருக்கம்:  ஆழ்வார் குறிச்சிசியில் உள்ள தன் பங்களாவை சீரமைக்க முயல்கிறார் தனவேல் முதலி. ஆனால் அதற்கு இடையூறாக ஒரு ஆவி இருப்பது மந்திரவாதி கேசவன் நம்பூதிரி மூலம் தெரியவருகிறது. இதற்கிடையில் பங்களாவினுள் தனியாக சென்ற நிதிலாவை ஒர் எலும்புக்கூடு துரத்த ஓடிவரும் நிதிலாவை ஒரு இளைஞன் தூக்கிச் செல்கிறான்.
இனி:  காரி ஓசை கேட்டதும் அந்த இளைஞன் சற்று நின்றான் கார் பங்களா முன் நிற்கவும் நிதிலாவை தோள் மீது சுமந்தபடி காரை நோக்கி நடந்தான். இதற்குள் காரிலிருந்து இறங்கிய தனவேலு நிதிலா அம்மா நிதிலா என்று அழைத்துக் கொண்டே பங்களாவினுள் நுழைய முற்பட்டார்.
    பெரியவரே கொஞ்சம் நில்லுங்க இதுவா நீங்க தேடிகிட்டு இருக்கற பொண்ணு? குரல் வந்த திசை நோக்கி திரும்பினார் தனவேல் ஆறரை அடி உயரத்தில் ஆஜானு பாகுவாய் புஜங்கள் வலுவேறி நிற்க தோளில் மகளை சுமந்து நிற்கும் வாலிபனைக் கண்ட அவர் கண்கள் நீ யார் என்று விசாரித்தன.
   என்ன பெரியவரே அப்படி பாக்கறீங்க? இது உங்க மகளா? என்று நிதிலாவை தரையில் கிடத்தினான் அவன். பங்களாவுக்குள்ள எதையோ பாத்து பயந்துடுச்சு போல இருட்டுன நேரத்துல பொம்பள புள்ளய தனியா அனுப்பலாங்களா? மயக்கம் போட்டு விழுந்துடுச்சு அதான் தூக்கினு போயி முதலுதவி பண்ணலாம்னு பாத்தேன். அதுக்குள்ளாற நீங்களே வந்துட்டீங்க! அப்ப நான் வரட்டுங்களா? அந்த இளைஞன் பேசி முடிக்க சுய நினைவுக்கு வந்தார் தனவேல்.
  என்ன என்னப்பா சொல்ற?
 போச்சுடா! நான் சொன்னது எதுவும் நீங்க கேக்கவே இல்லையா? ஏன் எல்லோரும் இப்படி மிரண்டு போயி கிடக்கறீங்க? என்னாச்சு உங்களுக்கு? இந்த பொண்ணு பங்களா உள்ள இருந்து பேய் பேயினூ கத்திகிட்டே வெளியெ வந்து மயக்கம் போட்டுச்சு இது உங்க பொண்ணுதானே சந்தேகமாய் கேட்டான் அவ்வாலிபன்.
  ஆ.. ஆமாம்பா ரொம்ப நன்றிப்பா உன் உதவிக்கு! நான் சொல்லியும் கேக்காம இவ தனியா புறப்பட்டு வந்துட்டா என்னாச்சுன்னு தெரியலியே என்று புலம்பினார் தனவேல். பயப்படறதுக்கு ஒண்ணுமில்லீங்க அதிர்ச்சியில ஏற்பட்ட மயக்கம் தான் கொஞ்சம் தண்ணியை முகத்தில தெளிச்சா சரியா போயிடும் என்று அவ்வாலிபன் கூறவும் அதுவரை காரிலிருந்து இறங்கி ஒரு வார்த்தை கூட பேசாதிருந்த நல்ல முத்து காரில தண்ணியிருக்கணுமே என்று காரினுள் தேடலானார்.
   சிறிது நீரை நிதிலாவின் முகத்தில் தெளிக்க அவள் அசைந்தாள் வியர்த்து கிடந்த முகத்தை தன் துண்டால் அவ்விளைஞன் துடைக்க நிதிலா மெல்ல கண் விழித்தாள். தன்னை சுற்றி ஒரு கும்பலே இருக்க வாலிபன் ஒருவன் தன் முகம் துடைப்பது கண்டு வெட்கி திடுக்கிட்டு எழுந்தாள் அவள்.
  ஸ் அப்பா இப்பதான் எனக்கு உயிரே வந்துச்சு என்றார் தனவேல். என்னம்மா ஆச்சு? ஏன் இப்படி மயங்கி கிடக்கிற ? அப்படி உள்ள என்னதான் நடந்தது என்று வினவினார் நல்ல முத்து.
  அங்கிள் உள்ள ஒரு குரலை கேட்டேன். அது ஒரு அழுகுரல் கொஞ்ச நேரத்துல ஒரு ஆண்குரலும் கேட்டது அது எங்கிருந்து வருதுன்னு தேடிகிட்டு மேலேறிப் போனேன். திடுமென எதிர்ல ஒரு எலும்புக் கூடு அது வாயசைச்சு வா மகளேன்னு கூப்பிடுச்சு அய்யோ பயங்கரமா இருந்துச்சு கத்திகிட்டே வெளியே வந்து மயங்கிட்டேன்  என்றாள் நிதிலா.
   இதைக் கேட்டு ஹாஹாஹா.. என அவ்வாலிபன் உரக்க சிரிக்க மூவரும் அவனை வினோதமாக பார்த்தனர். ஏம்பா சிரிக்கற இதுல சிரிக்கறதுக்கு என்ன இருக்கு? பின்ன என்னசார்? சிரிக்காம என்ன செய்வாங்களாம்? எதோ விட்டலாச்சார்யா படத்துல வர மாதிரி உங்க பொண்ணு கதை விடுது நீங்களும் நம்பிக்கிட்டு தலையை ஆட்டிகிட்டு இருக்கிங்க அவன் சிரிக்க நிதிலா வெகுண்டாள்.
   அனுபவிச்சவங்களுக்குதான் அந்த கஷ்டம் தெரியும் ? கண்டிப்பா உள்ள நான் எலும்புக்கூட்ட பாத்தேன்.
  ஆமாம் தம்பி உனக்கு விஷயம் தெரியாது! இந்த பங்களாவில ஆவி இருக்குது அத கேசவன் நம்பூதிரி கூட சொல்லிட்டார். என்று நடந்த கதையை சுருக்கமாக சொல்லி முடித்தார் நல்ல முத்து.
  அப்பவும் அவன் நம்பத்தயாராக இல்லை. கிராமத்து ஜனங்கதான் பேயி பிசாசுன்னு புரளி கிளப்பிகிட்டு திரியறாங்கன்னா பட்டணத்து ஆசாமி நீங்க கூட இதெல்லாம் நம்பிகிட்டு காச வேஸ்ட் பண்றீங்களே!
  மிஸ்டர் ..
ஸ்ரீவத்ஸன் என் பேர்!
 மிஸ்டர் ஸ்ரீவத்ஸன் அப்ப நான் உள்ள பாத்தது? ரெண்டு பேரு உயிர விட்டது இதெல்லாம் என்னன்னு சொல்ல போறிங்க?
 ரெண்டு பேரு உயிரவிட்டது தற்செயலான விஷயம். காக்கை உக்கார பணம் பழம் விழுந்த கதை.
  அப்ப நான் உள்ள பாத்த எலும்புக் கூடு?
நீங்க உள்ள எலும்புக்கூடு எதையும் பாக்கலேன்னு நான் சொல்றேன். நீங்க எதையோ கற்பனை பண்ணிகிட்டு பேசறீங்க! எல்லாம் உங்க மனப் பிரமைதான்னு நான் சொல்றேன்.
இல்ல நான் பாத்தது நிஜம் உள்ள அந்தஎலும்புக்கூடு பேசிச்சு
  அப்ப வாங்க இப்ப அந்த எலும்பு கூடு இப்ப இருக்கான்னு பார்க்களாம்
 ஐயையோ நான் வரலை
பார்தீங்களா ஏன் பயப்படறீங்க அங்க ஒண்ணுமே இருக்க போறது இல்லை
 இருந்துட்டா
அப்ப வாங்க எல்லோருமா போயி பார்ப்போம். தனவேல், எதுக்குப்பா இந்த வீர விளையாட்டு நீ நம்பாவிட்டா போ நாங்க கிளம்பறோம் என்றார்.
ஸ்ரீவத்ஸன் ஏளனமாக சிரிக்க அப்பா நான் ப்ருப் பண்றேன் வாங்க எல்லோரும் போய் பார்க்கலாம் என்றாள் நிதிலா விறைப்பாக
  என்ன பொண்ணுமா நீ திரும்ப மயங்கி விழறுதுக்கா மந்திரவாதி கூட ஊர்ல இல்லயாம் என்றார் தனவேல்.
 எந்த மந்திரவாதியும் தேவையில்ல உங்களுக்கு ஒண்ணும் ஆகாது அதுக்கு நான் உத்திரவாதம் வாங்க உள்ளே போகலாம் என்றான் ஸ்ரீவத்ஸன்.ஆமா பெரிசா உத்திரவாதம் கொடுக்க வந்துட்டாரு உயிரு போச்சுன்னா திரும்ப வருமா என்று புலம்பினார் நல்ல முத்து.
  ஒன்னும் ஆகாது அங்கிள் நீங்க ரெண்டு பேரும் வேணா இங்க இருங்க நாங்க உள்ளே போயி வந்திடறோம் நிதிலா கிளம்ப இரும்ம நாங்களும் வரோம் என்று பலியாடுகள் போன்ற முக பாவனையோடு தொடர்ந்தனர் இருவரும்.
 அவர்கள் உள்ளே நுழைவதை இரு ஜோடிக் கண்கள் உற்று நோக்கிகொண்டிருந்தன.
அழைக்கும் (9)

 
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2