கலைந்த கனவு!
கலைந்த கனவு!
என் உருவாக
கருவொன்று
உருவான வேளை!
உற்றாருடன்
சுற்றமும் கூடி
மட்டற்ற மகிழ்வோடு
கட்டவிழ்த்த காளையாக
திரிந்த வேளை!
இருமாத மகிழ்ச்சிக்கு
உருவான சோதனை
ஒருவாரம் முன்னே!
இருநாள் முன்பு
முடிந்ததன் வேலை!
உலகதனைக் காண
உருவாகும் முன்னே
கருவிலே கலைந்தது
என் கனவு!
மலை போல நம்பியவர்கள்
சிலையாகிப் போக
சிதைந்தது என் கனவு! தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!
Comments
Post a Comment