ஆயிரம் சிறை கண்ட தலைவர்! ஜோக்ஸ்
ஆயிரம் சிறை கண்ட தலைவர்! ஜோக்ஸ்
நேரம் சரி இல்லைன்னு ராசிக்கல் மோதிரம் போட்டியே இப்ப எப்படி இருக்கு?
அடகுக் கடையில இருக்கு!
தோப்பும் துறவுமா வாங்கிபோட்ட நம்ம தலைவர் இப்ப எப்படி இருக்கார்?
கோர்ட்டும் கேசுமா அலைஞ்சிகிட்டுருக்கார்!
அந்த அம்பயர ஏன் எல்லா பிளேயரும் திட்டறாங்க?
நான் ஸ்ட்ரைக்கருக்கு எல்.பி.டபிள்யூ கொடுத்திட்டாராம்.
டாக்டர் டாக்டர் நீங்கதான் என் தெய்வம்!
சரி சரி காணிக்கையெல்லாம் ஒழுங்கா போட்டுட்டியா?
அந்த ஸ்கூல்ல சீட் கேட்டியே கிடைச்சுதா?
இல்லே சீட் கொடுக்கறேன்னு சொல்லி ‘சீட்’பண்ணிட்டாங்க!
தலைவர் ஏன் கோபமா இருக்கார்?
பத்திரிக்கையில ஆயிரம் பிறை கண்டவர்னு போடறதுக்கு பதிலா ஆயிரம் சிறை கண்டவர்னு போட்டுட்டாங்களாம்!
மருமக காணாம போணதுக்கு கஷ்டப்படறீயே அவ்வளவு பாசமா?
நீ வேற அவ கட்டிகிட்டு போனது என்னோட பட்டுபுடவைய!
வெளிநாட்டுக்குப் போனியே அங்க உனக்கு என்ன பிடிச்சது?
ம்.. சளி பிடிச்சது!
எப்ப கேட்டாலும் தலைவர் உள்ளே இருக்காருன்னு சொல்றீங்களே எப்ப தான்யா வெளியே வருவார்?
அது அந்த சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்க்குத்தான் தெரியும்!
அந்த அமைச்சர் ஏன் ஆபிஸுக்குள்ள போகாமா மரத்தடியில உக்காந்து பைல் பார்க்கிறார்?
அவரு துறையா எப்ப மாத்துவாங்கன்னு அவருக்கே தெரியாதாம் அதனாலதான்!
தலைவருக்கு உலக அனுபவம் கம்மி போல இருக்கு!
எப்படி சொல்றே?
நிரா ரேடியோவில பேச ஏற்பாடு செய்யுங்கன்னு சொல்றாறே!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! பதிவு பிடித்திருந்தால் நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!
முதல் மூன்று ஜோக்குகள் அருமை
ReplyDeleteஹி..ஹி..ஹி..நகைச்சுவை
ReplyDeleteகமென்ட் செட்டிங் ஐ மாற்றினால் கருத்திட எளிதாக இருக்கும் ....
ReplyDeleteஹிஹிஹி
ReplyDeletekoodal bala said...
ReplyDeleteகமென்ட் செட்டிங் ஐ மாற்றினால் கருத்திட எளிதாக இருக்கும் ....
தங்கள் வருகைக்கு நன்றி! செட்டிங்கில் எதை மாற்ற வேண்டும் என்று சொன்னால் நிறைவேற்றப்படும்
நன்றி கோவை நேரம், கூடல் பாலா,நீரோ, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
ReplyDelete