முத்தம் தர ஏத்த இடம்!

முத்தம் தர ஏத்த இடம்! கிளு கிளு குட்டிக்கதை!

நான் அத்தை வீட்டில் நுழைந்த போது அத்தை மகள் வந்தனாவைத் தவிர வீட்டில் யாரும் இல்லை அனைவரும் ஏதோ பக்கத்து ஊரில் திருமணம் என்று சென்று விட்டார்களாம். அதுவும் நல்லதாய் போயிற்று.
  அத்தை மகள் வந்தனாவோடு மனம் விட்டு பேச வசதி. எல்லோரும் இருந்தால் கூச்சப்பட்டு ஓடிவிடுவாள். அவளுக்கு இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காது. ரொம்பவே கூச்சசுபாவம் பட்டும் படாமல் பேசிவிட்டு அகன்றிடுவாள் இன்றாவது அவளிடம் கொஞ்ச நேரம் தனிமையில் உரையாடி நம் வழிக்கு கொண்டு வர வேண்டும்.
  சோபாவில் அமர்ந்தேன். உள்ளே சமையல் செய்து கொண்டிருந்த வந்தனா என்னைப் பார்த்து வியந்தாள். நமுட்டுச் சிரிப்பொன்றை விரித்தேன் அவள் முகம் வெட்கத்தில் சிவந்து போனது. சொம்பு நிறைய தண்ணீரை தந்தவள் கை பற்றினேன். விலக்கி விட்டு உள்ளே ஓடினாள்.
  வந்தனா நல்ல அழகு கிள்ளினால் இரத்தம் வரும் அளவுக்கு சிவப்பு. நானோ மாநிறம்தான். சும்மாச் சொல்லக்கூடாது யாராவது தமிழ் சினிமா டைரக்டர் கண்ணில் வந்தனா பட்டுவிட்டாள் தொலைந்தாள் கூட்டிச் சென்று ஹீரோயினியாக்காமல் விட்டிருக்கமாட்டான். அவ்வளவு அழகு. எனக்கோ அவள் மேல் கொள்ளை ஆசை.ஆனால் அவளோ என்னிடம் பேசவேத் தயங்குவாள். இதுதான் நல்ல சந்தர்ப்பம். வாய்ப்பை விட்டுவிடாதே வீட்டில் யாரும் இல்லை உன் ஆசையை முடித்துக் கொள் என்றது மனசு. அப்படி என்ன ஆசை என்கிறீர்களா? அவளை கட்டிபிடித்து முத்தம் தர வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. அவளானால் நெருங்கவே விடமாட்டாள்.
  இன்று அந்த ஆசையை பூர்த்தி செய்துகொள்ள வேண்டியதுதான். முத்தம் தந்து அவளை அசத்திவிடவேண்டும் சத்தம் போடாமல் உள்ளே நுழைந்தேன். தொட்டுப் பேசினாலே கத்துவாளே! முத்தமாவது கொடுப்பதாவது? ஊரைக் கூட்டி ஆர்பாட்டம் செய்து விட்டால் என்ன செய்வது? சிறிது தயங்கினேன் ஆனால் மனசு வென்றது. சரி ஆனதை பார்ப்போம் என்று அவளின் பின் பக்கமாக சென்று அப்படியே அவளைக் கட்டி பிடித்து அவள் கன்னத்தில் ‘இச்’ சென்று முத்தம் பதிக்க அவள் என்னை உதறினாள்.
  என்ன கவிதா இது? ச்சி விடுடி உன்கூட ரொம்ப ரோதனையாப் போச்சு! எப்ப பாரு இதே நினைப்புதானா என்கிட்ட என்னத்தடி கண்டே என்று முறைத்தாள்.
  ஐ! நல்லா ஏமாந்தீங்களா? அத்தை பொண்ணுன்னாலே மாமன் மகன் தான் கட்டி பிடிக்கணுமா? மாமன் மகள் கட்டிபிடிக்க கூடாதா? டேக் இட் ஈஸி வாசகர்களே!

தங்கள் வருகைக்கு நன்றி ! பதிவு குறித்த தங்கள் கருத்தினை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2