எங்கள் ஆசானும்! என்னோட தலைவலியும்!

 
எங்கள் ஆசானும்! என்னோட தலைவலியும்!



நேற்று மாலையில் பொழுது போகாமல் சன் டிவி பார்க்க நேர்ந்தது. புரட்சி கலைஞரின் எங்கள் ஆசான் என்று ஒரு படத்தை ஒளிபரப்பி வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்கள் முழுதும் பார்க்காத எனக்கே தலைவலி தாங்க வில்லை பார்த்தவர்களுக்கு என்ன என்ன நோய் வந்ததோ தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் ஞாயிறு மாலை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் படங்களுக்கு மக்கள் மத்தியில் அவ்வளவு வறவேற்பு இல்லை போலும்.

  முன்பொரு காலத்தில் தூர்தர்ஷன் ஒளிபரப்பிய ஞாயிறு படங்களுக்கு நாங்கள் எல்லோரும் விசிறிகள் எப்போது மணி 5.45 ஆகப் போகிறது என்று காத்திருந்து டி.வி வைத்திருப்போர் வீட்டிற்கு படையெடுப்போம். அப்போதும் பலசமயம் கண்றாவி படங்களை போட்டு நம்மை பாடுபடுத்தும் தூர்தர்ஷன். பின் சன் ஜெயா,விஜய் ராஜ் என பல சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு படங்களை ஒளிபரப்பின . இப்போதெல்லாம் யாரும் தூர்தர்ஷனை பார்ப்பதில்லை போலும். ஆனாலும் அவ்வப்போது பல நல்ல விஷயங்களை வழங்குவதில் தூர்தர்ஷனுக்கு நிகர் இல்லை.

     சரி விஷயத்திற்கு வருவோம் எங்கள் ஆசானில் வழக்கம் போல பழைய எம்.ஜி.ஆர் படம் போல நாட்டுக்கு உழைக்கும் மகேந்திரன் (விஜயகாந்த்) புகழ்பாட வில்லன்களிடமிருந்து மக்களை காத்து நல்லபெயர் எடுக்கிறார் ஹீரோ! ஹீரோயின் பெயர் தெரியவில்லை மும்பை இறக்குமதி போலும் நடிப்பென்றால் என்ன விலை என்று கேட்கிறார். அவருக்கு யார் டப்பிங் கொடுத்தார்களோ சகிக்கவில்லை.

    இந்தபட விளம்பர இடைவேளையில் பாலிமரில் தெய்வத் திருமகள் படத்திலிருந்து கிளிப்பிங்ஸ் ஒளிபரப்பியதை பார்த்தேன். விக்ரம் மனநிலை பாதிக்கப்பட்டு ஒரு குழந்தை போல அருமையாக நடித்திருந்தார். அவரது குழந்தையாக வரும் சிறுமி மனதில் இன்னமு நிற்கிறார். பள்ளிக்கூட நிர்வாகியாக அமலா பால் என்னவொரு அழகான பாத்திரப்படைப்பு அருமையாக இருந்தது. சிறிது நேரமே பார்த்தாலும் மன நிறைவை அளித்து படத்தை பார்க்க தூண்டும் படி இருந்தது. இது போன்ற படங்கள் தான் தமிழ் சினிமாவை இன்னமும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது எனலாம்.



விஜய் டிவி யில் நீயா நானா என்று விவாத நிகழ்ச்சி பிறந்த ஊரைபெருமை பேசுவோருக்கும் பிறந்த ஊரை தூற்றுவோருக்குமான விவாதம் கோபிநாத் அருமையாக துவக்கி வைக்க ஒரு நாஞ்சில் நாட்டு இளைஞர் எங்கள் ஊர் பெண்கள் அழகு என்று வர்ணிக்க சென்னை சுடிதார் பெண்ணுக்கு பொறாமை பிடித்து ஏன் நாங்களெல்லாம் அழகில்லையா என விளாச ,நாஞ்சில் இளைஞர் எங்கள் ஊர் பெண்களுக்கு கூந்தல் அழகு நீண்ட கூந்தல் உடையவர்கள் அவர்கள் இனிப்பு பலகாரம் செய்வதில் வல்லவர்கள் என்று பேச இளைஞியோ எங்கள் கூந்தலுக்கு என்ன குறைச்சல் என்று கேட்க உன் கூந்தல்தான் குறைச்சல் என் போன விவாதம் ரசிக்கும்படி இருந்தது.

     திருநெல்வேலி இளைஞர் ஒருவர் ஊரில் எதற்கெடுத்தாலும் சண்டை சொந்த சித்தி கூட பேச முடியவில்லை அப்புறம் என்ன பெரிய ஊர் என்றார். பலருக்கு பேச தெரியவில்லை. ஆர்வத்தில் வந்தவர்களாக தெரிந்தது. பலருக்கு பேசவே வாய்ப்பில்லை  கூடுமானவரை ஒருவருக்கே வாய்ப்பளிக்காமல் அனைவருக்கும் வாய்ப்பளிக்க கோபிநாத் முயலவேண்டும். ஒரு மணி நேர நிகழ்ச்சி தற்போது இரண்டு மணி நேரமாக மாறியதோடு கூடுதல் விளம்பரங்கள்வேறு தொல்லை தருவதால் என்னால் நிகழ்ச்சி முழுவதும் காணமுடியவில்லை.

       இந்த மாதிரி நாலு நல்ல நிகழ்ச்சிகள் இருந்தால் நாற்பது உபயோகமற்ற நிகழ்ச்சிகள்  போதாக் குறைக்கு டப்பிங் சீரியல்கள் வேறு என்று திருந்தும் இந்த தமிழ் சேனல்கள்! என்று குறையும் நம் தலைவலி!



தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2