வளைந்து கொடு! கவிதைகள்

வளைந்து கொடு!

வளைந்து பார்
இளைஞா!
வானம் வசப்படும்!
நாணல் வளைவதால்தான்
அலைகளை
எதிர்த்து நிற்கிறது!
மூங்கில் வளைவதால்தான்
வில்லாக மாறி
எதிரிகளை வீழ்த்துகிறது!
ஆறு வளைந்ததால்தான்
நதியாகி நாடு
செழிக்கிறது!
உயரத்தை அடைய
சற்றெ தாழ்வதில்
தவறேதும் இல்லை!
நீயும் வளைந்து கொடு!
வாழ்க்கை உன் வசமாகும்!


துவண்டு போகாதே!

துவண்டு போகாதே
இளைஞா!
துள்ளி எழு!
துயரங்கள் எல்லாம்
துகள்களாய் சிதறிப்போகும்!
துன்பங்களை
கண்டு கலங்கிடாதே!
துன்பமும் துயரமும்
வாழ்வின் ஒரு பகுதி!
நாணயத்தின் இரு பக்கங்கள்
போல் இன்பமும் துன்பமும்
இணைந்ததே வாழ்க்கை!
துன்பத்தை கண்டு
அஞ்சாதே! துணிந்து நில்!
துன்ப அலைகளை
முயற்சி எனும் துடுப்போடு
கடந்துவா!
இன்பம் எனும் இனிய வாசல்
உன்னை வறவேற்கும்!

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! பதிவு பிடித்து இருந்தால் நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!

Comments

Post a Comment

Popular posts from this blog

வெற்றி உன் பக்கம்! கவிதை!

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!