நித்யானந்தாவை வெளியேறச்சொல்லி இந்து மக்கள் கட்சி ஆர்பாட்டம்


சென்னை: இந்து மதத்தையும், தர்மத்தையும் தொடர்ந்து அவமதித்து வரும் நித்தியானந்தாவை இந்து மதத்தை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஞானசம்பந்தம் தலைமையில் நித்தியானந்தாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஞானசம்பந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இந்து மதத்தையும், இந்து தர்மத்தையும் நித்யானந்தா தொடர்ந்து அவமதித்து வருகிறார். குண்டலினி யாகம் என்ற பெயரில் தாய்மார்களை அந்தரத்தில் பறக்க விடுவதாக சொல்லி மிகப்பெரிய கேலிக் கூத்தை பிடதி ஆசிரமத்தில் நடத்தி விட்டு அனைவரையும் ஏமாற்றி வருகிறார்.

நித்தியானந்தா இந்து மதத்தை விட்டே வெளியேற வேண்டும். இந்து மக்கள் கட்சிக்கும், இந்து இயக்கங்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு ரவுடி சாமியாராக உருவாகி இருக்கிறார் நித்தியானந்தா.

கோடிக்கணக்கான சொத்துக்களை கொள்ளை அடித்து வைத்திருக்கிறார். நித்தியானந்தாவின் சொத்துக்களை முடக்க வேண்டும். பெங்களூரு நீதிமன்றத்தில் நித்தியானந்தாவின் பிணையை ரத்து செய்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

வாழ்ந்த தெய்வம் ராமகிருஷ்ண பரமஹம்ஸருடைய பெயரை பரமஹம்ஸ என்ற எழுத்தை பரமஹம்ஸ நித்யானந்தர் என்று நித்யானந்தா தன் பெயருக்கு முன்னர் வைத்துக்கொண்டிருக்கிறார். இதனை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

பரமஹம்ஸ நித்தியானந்தர் என்று நித்தியானந்தர இனி போடுவாரானால், பிடதி ஆசிரமம் இந்து மக்கள் கட்சியினரால் முற்றுகையிடப்படும் என்று அவர் எச்சரித்தார்.
 நன்றி  தட்ஸ் தமிழ்


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்தினை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2