சோர்ந்து போகாதே! கவிதைகள்
சோர்ந்து போகாதே!
சோர்ந்து போகாதே
தோழா!
நிமிர்ந்து நில்!
சிலிர்த்தெழு!
சிந்தனைச் செடிகளுக்கு
உரம் கூட்டு!
உறக்கத்திலும் உயர்வே
உன் எண்ணமாகட்டும்!
எள்ளி நகைத்தோரை
தள்ளி விட்டு
துள்ளி வா தோழா!
தயக்கமே உனது
தடைக்கல்!
தகர்த்தெறி
உன் தடைகளை!
உலகம் உன்னை
கவனிக்க
உயர்வு உன் வீட்டு
வாசலை தட்டும்!
வெற்றி படிகள்
உன்னை ஏற்றிச்செல்லும்!
உறுதியாய் நம்பு!
ஒ இதுதான் இந்தியா!
காங்கிரஸில் பதவிச்சண்டை!
காஷ்மீரில் எல்லைச் சண்டை!
ஒரு வேளை உணவுக்கே
ஓராயிரம்பேர் திண்டாட
ஒருலட்சம் கோடிகள்
சாதாரணமாய் கைமாறும்!
கறுப்பு பணங்கள்வெளியே வர
கட்சிகள் தடைபோட
ஊழலுக்கு எதிராய் உண்ணாவிரதங்கள்
ஒரு வார அமர்க்களப்படும்!
ஐஸ்வர்யா கர்ப்பமானால்
அனைத்துமே மறந்து போகும்!
இலவசங்கள் வரிசையிலே
இல்லாதது பெண்டாட்டிதான்!
பல லட்சம் கோடிகள்
அன்றாடம் செய்திகளில்
திண்டாடும் மக்கள் நலன்
பேணுவார் யாருமிலர்!
இருளிலே மூழ்கினாலும்
ஒளிர்கிறதாம் இந்தியா!
உவமைக்கு பஞ்சமில்லை!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்தினை இட்டுச் செல்லலாமே! பதிவு பிடித்திருந்தால் நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!
Comments
Post a Comment