“கண்ணாமூச்சி”

“கண்ணாமூச்சி”  மூலம் ருஸ்கின் பாண்ட்
   தமிழில் “தளிர் அண்ணா”


நான் அந்த ரயிலின் ‘ரொகானா’ கம்பார்ட்மெண்டில் அமர்ந்திருந்தபோது அந்த பெண் என்னுடைய பெட்டியில் ஏறினாள். அவளுடன் வந்த இருவர் அவளது பெற்றோராய் இருக்க வேண்டும் அவர்கள் மிகவும் கவலையாக இருந்தனர். அவளது அம்மா அவளது பொருட்களை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்றும் புதியவர்களிடம் பேச்சை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தாள்.
  நான் பார்வையில்லாதவன் என்னால் அந்த பெண் எப்படி இருப்பாள் என்று சொல்ல முடியாது ஆனால்,அவள் பாதங்களிலிருந்து காலணிகளின் ஓசையைக் கொண்டு அவள் என்னருகேதான் அமர்ந்திருக்கிறாள் என்று நினைத்தேன். நான் அவள் குரலைக் கேட்க விரும்பினேன்.
  ‘நீங்கள் டேராடூனுக்கு செல்கிறீர்களா?” நான் அந்த ரயில் கிளம்பியதும் கேட்டேன். நான் அந்த பெட்டியின் மூலையில் அமர்ந்திருந்ததால் என்கேள்வி அவளுக்கு அதிர்ச்சியை தந்திருக்க வேண்டும். எனவே வியப்புடன் ‘நான் உங்களை கவனிக்கவே இல்லை யாரும் இல்லை என்று நினைத்தேன்’ என்றாள்.
  நான் அதில் வியப்பேதும் அடையவில்லை. ஏனேனில் பார்வையுள்ள மனிதனே தன் முன்னால் என்ன இருக்கிறது என்பதை கவனிப்பது இல்லை. ஆனால் அவர்கள் நிறைய கவனிக்கவேண்டும் கம்பார்ட் மெண்ட் ரிஜிஸ்தரில் பார்த்தால் கூட நான் இங்கிருப்பது தெரிந்திருக்கும்.
  ‘நான் கூட உங்களை கவனிக்க வில்லை ஆனால் நீங்கள் வரும்சத்தம் கேட்டேன்.’ நான் அவளேதிரே குருடன் என்று காட்டிக்கொள்ள விரும்பவில்லை. எனவே என் இருக்கையை விட்டு எழ வில்லை. அது எனக்கு ஒன்றும் கஷ்டமாயிருக்க வில்லை.
‘நான் சஹாரன்பூர் செல்கிறேன். அங்கு என் சித்தி உள்ளாள். நீங்கள்?’
‘டேராடூன் அங்கிருந்து மசூரி’ என்றேன்.
  ‘நீங்கள் அதிர்ஷ்ட காரர் நான் கூட மசூரி போயுள்ளேன். நான் மலைகளை ரசிப்பேன். குறிப்பாக அக்டோபர் மாதங்களில் மலைகள் பார்க்க அழகாக இருக்கும்’
 ‘ஆம் அதுதான் சிறந்த நேரம்’ நான் பதிலுரைத்தேன். அப்புறம் எனது மூளையைத் தட்டி எழுப்பி , ‘அந்த மலைகள் சவுக்கு மரங்களால் சூழப்பட்டிருக்கும் அங்கு அழகினை ரசிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும் இரவு வேளைகளில் நெருப்பை மூட்டி அதன் முன் அமர்ந்து மதுவை சிறிது குடித்தால்... நான் ரசித்து சொல்ல துவங்கினேன். நிறைய சுற்றுலா பயணிகள் வருவார்கள். அந்த சாலை எப்பொழுதும் அமைதியாக இருக்கும்.
  அவள் அமைதியாக இருந்தாள். நான் ஆச்சர்யபட்டேன். எனது பேச்சு அவளை கட்டிப் போட்டுவிட்டதா? அல்லது அவள் விசித்திரமான பிறவியா? அப்பொழுது நான் ஒரு தவறு செய்தேன். ‘வெளியே என்ன தெறிகிறது? அப்படி பார்க்கிறீர்கள்?’ என்றேன்
   ஆனால் அவள் என் கேள்வியால் பாதிக்க படவில்லை. அவள் முதலிலேயே அறிவாளோ நான் குருடன் என்று? ஆனால் அவளது அடுத்த கேள்வி என் சந்தேகத்தை போக்கியது. ‘நீங்கள் ஜன்னல் வழியே பார்த்து தெரிந்து கொள்ள முடியாதா?அவள் சாதாரணமாய் கேட்டாள்.
நான் அங்கிருந்து நகர்ந்து ஜன்னலோரமாய் வந்து ஜன்னலை திறந்தேன். உடனே ஜன்னல் வழியே மண்ணின் வாசனை என் நாசியை தீண்டியது.என்னுடைய மூளை உணர்த்த தந்தி கம்பங்கள் வெளியே தெரிவதாகக் கூறினேன். மரங்கள் ஓடி வருகின்றன. ஆனால் உண்மையில் அங்கேயேதான் இருக்கின்றன இல்லை?
  இது வழக்கமான காட்சிதான் அவள் சொன்னாள். ஜன்னலிலிருந்து திரும்பி அவளையே நோக்கினேன். அவள் மௌனமாக இருந்தாள். ‘உங்களுடையது சுவாரஸ்யமான முகம்!’ என்றேன். சொல்லிவிட்டு மவுனித்தேன். ஏனேனில் சில பெண்கள் பொய்யான புகழ்ச்சிகளை ஏற்றுக் கொள்வது இல்லை. அவள் மனதை மயக்கும் படி சிரித்தாள். அது மணியோசைபோல இருந்தது. நீங்கள் நன்றாக சொன்னீர்கள்! என்றாள்.என்னுடைய முகம் அழகானது என்று பலர் கூறிக் கூறி நான் அலுத்துப் போய்விட்டேன்! என்றாள் திரும்பவும்.
  ஓ அவள் அழகான முகத்தை உடையவளாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். ‘நல்லது சுவாரஸ்யமான முகம் அழகாகவும் இருக்கும்’ என்றேன்.
   ‘நன்றாக பேசுகிறீர்கள்! ஆனால் ஏன் வருத்தமாய் இருக்கிறீர்கள்?’
  ‘அடுத்து உங்கள் ஸ்டேஷன் வருகிறது!’ நான் பேச்சை மாற்றினேன்.
‘அடக்கடவுளே! அதற்குள்ளாகவா! ஆனால் என்னால் இரண்டு மூன்று மணி நேரமெல்லாம் ரயிலில் அமர்ந்திருக்க முடியாது’
 இருக்கும் சிறிது நேரத்தை அவளுடன் கழிக்க விரும்பினேன். அவளுடன் பேசிக்கொண்டே வந்தேன். அவல் பேசுவது அருவி மலையிலிருந்து கொட்டுவது போலிருந்தது.அவள் இன்னும் சிறிது நேரத்தில் ரயிலை விட்டு இறங்கி விடுவாள். என்னை மறந்துகூட போகலாம். ஆனால் அவள் என் பயணம் முடியும் வரை கூட வருவாள் என்நினைவில்.இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும்.
  விசில் சத்தம் கேட்டது. வண்டி மெதுவாக செல்ல ஆரம்பித்தது. அவள் தனது பொருட்களை எடுத்துக் கொண்டாள். நான் கற்பனை பண்ணிக் கொண்டேன். அவளது தலைக்கேசம் அடர்த்தியாக நீண்டு தோள்கள் வழியாக விழுமா? அல்லது சிறிதாக வெட்டியிருப்பாளோ?
  ரயில் நிதானமடைந்து ஸ்டேஷனில் நின்றது. வெளியே போர்ட்டர்கல் மற்றும் வியாபாரிகளின் குரல் உரக்க கேட்டது. ஒரு பெண்மணியின் குரல் உரக்க ஒலித்தது. அது அவள் சித்தியாக இருக்க வேண்டும். ‘போய் வருகிறேன்!’ விடைபெற்றாள்.அவள் என்னருகே நின்றிருந்தாள். அவள் தலைக்கேசத்திலிருந்து வந்த வாசம் என்னைத் தழுவியது. நான் அவளது கேசத்தை தடவ முயன்றேன்.ஆனால் அவல் நகர்ந்து விட அந்த வாசம் மட்டுமே நிலைத்தது.
  வெளியே குழப்பமான பேச்சுக்கள் கேட்டன. ஒரு மனிதன் பெட்டியினுள் நுழைந்தான். திக்கிதிக்கி மன்னிப்பு கேட்டபடி வந்தவன் கதவை மூடினான். அத்துடன் உலகமே இருண்டது போல ஆனது. நான் என்னுடைய இருக்கைக்கு சென்றேன். கார்டு விசில் ஊத ரயில் நகர ஆரம்பித்தது.
 ரயில் வேகமெடுத்து அதன் சக்கரங்கள் தண்டவாளத்துடன் இணைந்து தாளமிசைக்க ஆரம்பிக்க நான் ஜன்னலோரமாய் அமர்ந்தேன். மாலைச்சூரியன் மங்க துவங்க இருள் என்னைச் சூழ்ந்தது. மீண்டும் நான் அந்த புதிய பயணியிடம் விளையாட நினைத்தேன்.
‘நான் வருந்துகிறேன்.நான் சிறந்த வழிப்பயணியாக இருக்க முடியாது சற்றுமுன் சென்றவளை விட’ அவனே முந்திக் கொண்டான்.
  அவள் ஒரு சுவாரஸ்யமான் பெண்.உங்களால் சொல்ல முடியுமா? அவளுடைய கூந்தல் நீளமானதா? குட்டையானாதா?
 “நான் அதைக் கவனிக்க வில்லை!அவள் தலைமுடியை நான் பார்க்கவில்லை! ஆனால் கண்களை பார்த்தேன். அவளது அழகான கண்கள்! 
 நான் சுவாரஸ்யமானேன் சொல்லுங்கள் என்றேன் அவளது கண்கள் ஆம் அழகான அந்த கண்கள் எதற்கும் பயன் படாது. ஏனேனில் அந்த கண்களில் ஒலியில்லை! நீங்கள் கவனித்தீர்களா? அவன் கேட்க நான் சிலையானேன்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! பதிவு பிடித்திருந்தால் கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2