ஆவி அழைக்கிறது! பகுதி 11


ஆவி அழைக்கிறது!
                   பகுதி 11
                                  எழுதுபவர்  “பிசாசு”

முன்கதை சுருக்கம். ஆழ்வார் குறிச்சியில் உள்ள தனது பங்களாவை சீர்படுத்த முயலும் தனவேலுக்கு பொன்னம்மா எனும் ஆவி தொந்தரவு தருகிறது.மந்திரவாதி கேசவன் நம்பூதிரி தாயத்து மந்திரித்து கட்டுகிறார். அன்று இரவில் மீண்டும் அவரை ஆவி அழைக்கிறது!.
  இனி!.  முதலில் அழுகுரல் அது பெண்ணின் குரல் இப்போது சிரிப்பு இது ஆணின் குரல். முகம் வியர்க்க தனவேல் படுக்கையை விட்டு எழுந்தார். சுவிட்சை ஆன் செய்தார். ஆனால் அது ஆனிலேயேதான் இருந்தது. ஆனால் எரியவில்லை! முகத்தை துடைத்துக் கொண்ட தனவேலு அருகில் இருந்த தண்ணீர் கூஜாவிலிருந்து சிறிது தண்ணீரை அருந்தினார்.நம்பூதிரி கொடுத்த விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டார்.
இப்பொழுது சற்று ஆசுவாசமாக இருந்தது. அப்படியே கட்டிலில் அமர்ந்தார்.
  மீண்டும் அந்த அழுகுரல் ஆரம்பமானது! கடிகாரத்தை பார்த்தார். நேரம் நள்ளிரவை தாண்டிக்கொண்டிருந்தது. வியர்த்துகொட்டியதை டவலால் துடைத்தபடி டார்ச்சை எடுத்துக் கொண்டு அழுகுரல் வரும் திசையை நோக்கி நடந்தார்.அந்த அழுகுரல் வீட்டு பின் புறத்தில் இருந்து வந்தது. பின்வாசல் கதவை தாழ் நீக்கித் திறந்தார். சில்லென்ற காற்று முகத்தில் வீசியது.அந்த காற்று அவரை சற்று தெம்பாக்கினாலும் அழுகுரல் அவதிக்குள்ளாக்கியது.
  புழக்கடையில் வாழைமரங்கள் காய்த்து தொங்கின. வேப்ப மரம் சித்திரை மாதமாகையால் பூத்து ஒருவித மணத்தை வீசிக் கொண்டிருந்தது. ஒன்றிரண்டு மல்லிச் செடிகளின் மலர் வாசனை ரம்மியமாக இருந்தது. அதோ கிணற்றடியில் ஒரு பெண் தலையில் முக்காடிட்டு அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாளே அவள் யார்?
  தனவேலின் கால்கள் நடுங்கின. மேலே நடக்கலாமா? இல்லை இப்படியே திரும்பி விடலாமா? சில்லென்ற காற்றிலும் முகத்தில் வியர்வைத்துளிகள் துளிர்த்தன.அவரது இதயம் படபடத்தது. கைகளில் முடி சிலிர்க்க அந்த பெண்ணையே உற்று நோக்கினார். அவள் இவர்புறம் திரும்பினாளில்லை!.
   தனவேல் குழம்பினார். அது பெண்ணா இல்லை பேயா? அருகில் செல்வோமா வேண்டாமா? என்று பலவாறு யோசித்தார். அந்த பெண்ணும் அழுகையை நிறுத்தியபாடில்லை. அந்த அழுகை சத்தம் இன்னும் சற்று அதிகமாகவே வந்தது. நம்பூதிரி கொடுத்த தாயத்தை தொட்டுப் பார்த்து கொண்ட தனவேல் ஒரு முடிவோடு அந்த பெண்ணை நெருங்கினார்.
   த. ஏ ஏய் பொண்ணு யாரு யாரும்மா நீ இந்த அகால வேளைல இங்க வந்து அழுதுகிட்டு இருக்கே? எப்படியோ துணிவை வரவழைத்துக் கொண்டு கேட்டார். இதுவறை முகத்தை மூடிக்கொண்டிருந்த அந்த பெண் அந்த முகமூடியை விலக்கினாள்.
அந்த முகம் மிகவும் கோரமாக இருந்தது. அவளது கண்களில் நெருப்பு சுடர் விட்டது. அவள் ஆக்ரோஷமாக தனவேலை நோக்கினாள்.
  தனவேலு! என்னைத் தெரியலையா? நீதான் மறதிக்காரனாச்சே அதான் மறந்திட்ட ஆனா நான் மறக்கல தனவேலு வா வா! கிட்ட வா அப்ப எவ்வளவு ஆசையா பொன்னம்மா பொன்னம்மான்னு சுத்தி சுத்தி வருவே ஆனா பாவி என்னை நாசம் பண்ணிட்டியேடா! உன்னை சும்மா விடலாமா? வா வா தனவேலு என்கிட்ட வந்து சேர்ந்துடு நாம் இனியாவது சந்தோஷமா இருப்போம் வா!
  அந்த பெண்ணின் அழைப்பை கேட்டு தனவேலு மிரண்டார். அப்படியே திரும்பி ஓடலானார். தனவேலு ஓடாதே நில்லு 30 வருஷம் காத்திருந்து உன்கிட்ட வந்திருக்கேன் ஓடாத நில்லு என்று அந்த பெண் விகாரமாய் சிரிக்க ஆரம்பித்தாள்.
  தனவேலால் ஓடவும் முடிய வில்லை ஒரே இடத்தில் ஓடிக்கொண்டிருந்தார். அவர் எதிரே இப்பொழுது ஒர் ஆண் உருவம் தோன்றியது. தனவேல் நா பிறழ நீ க்க்.. கந்த.. கந்தன் தானே! என்று வினவினார்.
 பதிலுக்கு அந்த உருவம் ஹாஹா! வென சிரித்தது! பரவாயில்லையே என்னைக்கூட ஞாபகம் வைச்சிகிட்டு இருக்கியே! வா தனவேலு நாம ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடுவோம் அவ்வுருவம் கை நீட்ட அது வளர்ந்து கொண்டே வந்து தனவேலின் கழுத்தை நெருக்கியது. 
  வே.. வேண்டாம் கந்தா! என்னை விட்டுடு! நோ ! என்னை ஒண்ணும் செஞ்சிடாதே என் பொண்ண அனாதை யாக்கிடாதே! அலறினார் தனவேல் அந்த உருவம் கைப் பிடியை தளர்த்தியது. டேய் தனவேலு இப்படித்தானே அன்னிக்கு நானும் கெஞ்சினேன் அன்னிக்கு பணத்திமிர்ல ஆடினேயே உன்னை சும்மா விடலாமா? விடக்கூடாது என்று மேலும் நெருக்கியது
 ஓஒ நோ! என்னை விட்டுடு என்னை விட்டுடு என்றுகழுத்தை கையில் பிடித்தபடி படுக்கையில் அலறிக்கொண்டிருந்தார் தனவேலு. அவரது அறையில் லைட் எறிந்தது. நிதிலா உள்ளே ஓடி வந்தாள் அப்பா அப்பா என்னப்பா ஆச்சு என்று அவரை பிடித்து உலுக்கினாள்.
  தனவேல் பேந்த பேந்த விழித்தார். நி நிதில உனக்கு ஒன்னும் ஆகலையே நான் எப்ப படுக்கைக்கு வந்தேன்?
 என்னப்பா உளற்றீங்க? நைட் இங்கதானே படுத்தீங்க?
 ஐயோ உனக்கு தெரியாதும்மா! நடு ராத்திரியிலே ஒரு பொண்ணு புழக்கடையில அழுது கிட்டிருந்தா நான் அவயாருன்னு பாக்க வெளியே போனேனா!
 என்னப்பா கதை விடறீங்க? நானும் பக்கத்து ரூம்ல தானே படுத்து இருக்கேன்? எனக்கு கேக்காத அழுகை சத்தம் உங்களுக்கு எப்படி கேட்டது. நீங்க ஏதோ கனவு கண்டு பயந்து போயிருக்கீங்க இப்ப தான் மணி ஒண்ணு ஆகுது.
உங்க அலறல் சத்தம் தவிர வேற எந்த சத்தமும் இங்க எனக்கு கேக்கலை! நீங்க ரொம்பவும் பயந்து போயிருக்கீங்க அதனால நானும் இங்கேயே உங்களுக்கு துணையா படுத்துக்கிறேன்.பயப்படாம படுத்து தூங்குங்கப்பா! என்றாள் நிதிலா.
   தனவேலுக்கு ஒன்றுமே புரியவில்லை. அழுகுரல் பொன்னம்மா கந்தன் எல்லாம் கனவுதானா? அப்படியானால் தான் வெளியே எழுந்து சென்றது கதவை திறந்தது பொன்னம்மா, கந்தணைப் பார்த்தது. எல்லாம் பொய்யா?
தலையில் கை வைத்து அப்படியே கால்களில் முகம் புதைத்தார். அங்கே அவரது கால்களில் ஈரம் தெரிந்தது. கிணற்றடியில் இருந்த சேறு அவர் கால்களில் ஒட்டிக் கொண்டிருந்தது.
  அப்படியானால் நான் வெளியே சென்றது நிஜம் பின் எப்படி உள்ளே வந்தேன்? யார் என்னை கூட்டிவந்தார்கள்? அவர்மிகவும் குழம்பிப்போக அப்பா இன்னும் என்ன யோசனைப்பா பேசாம படுத்து தூங்குங்கப்பா! காலையில பார்த்துக்கலாம் என்றாள் நிதிலா.
 அப்படியே கட்டிலில் விழுந்தார் தனவேல் இப்பொழுது அவர் கைகளில் அந்த தாயத்தைக் காணவில்லை ! அது எங்கே போனது? அப்படியே கண்களை மூடினார். அவர் கண் முன்னே பொன்னம்மாளின் உருவம் தோன்றி தனவேலு இந்த தாயத்து என்னை என்ன செய்திடும்? என்று கைகளில் தாயத்தை பிடித்தபடி கேட்க
வேண்டாம் அத எதுவும் செஞ்சிடாதே கொடுத்திடு உளற ஆரம்பித்தார் தனவேல்.
அழைக்கும்(11)
  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!

Comments

  1. பேய்க்கதை நல்லாவே இருக்கு. நல்ல வேளையாய் இரவு படிக்கவில்லை!
    word verification எடுத்து விடுங்களேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2