நான் ரசித்த சிரிப்புகள்!

நான் ரசித்த சிரிப்புகள்!
 
பல வார இதழ்களில் வெளியான சிறந்த ஜோக்குகளின் தொகுப்பு இது!

“தலைவர் தனக்கு அரசியல் அறிவு கம்மின்னு நிருபிச்சிட்டாரு”
“எப்படி’
“லோக்பால்ங்கறது நடிகை அமலா பாலின் தங்கச்சியான்னு கேக்கறாரு”
            -எஸ் ராஜகோபாலன்

வறவேற்பு வாசகம் எழுதனதுக்கா தலைவர் உன்னை திட்டறாரு?
ஆமா “கலைவாணியின் புதல்வனே வருக!ங்கறதை “களவாணியின் புதல்வனே வருக! ன்னு எழுதிட்டேன்!
                     -தஞ்சை தாமு

என் மனைவி என்னோட சண்டை போட்டா சாரி கேட்டுடுவா!
என் மனைவி ‘சாரி’ கேட்டுதான் சண்டையே போடுவா!
                       -தஞ்சை தாமு

என்னை என் மனைவி விவாகரத்து பண்ணிடுவாளோன்னு பயமா இருக்கு!
  என்னடா சொல்றே?
அது தான் இலவசமா மிக்ஸி கிரைண்டர் எல்லாம் வரபோகுதே!
                           -ப நீலவேணி

பையன் பெரிய இடத்துப் பிள்ளைன்னும் சொல்றீங்க.. ஆனா அவங்க குடும்பம் ஜெயிலே பார்த்ததில்லேன்னு சொல்றீங்க நம்பமுடியலையே!
                          எஸ் முகமது யூசுப்

அமைச்சர் இல்லேங்கறீங்க ஆனா போர்டுல ‘உள்ளே’னு இருக்கே?
 ஆமாங்க அவரு ‘உள்ளே’ தான் இருக்காரு தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க!
                         எஸ்.எம்.கே. சுந்தர்.

கட்சியிலே யாரோ துரோகி இருக்கான்யா!
ஏழெட்டு பேர் இருக்கோம் யாரைச் சொல்றீங்க தலைவரே!
                            ஆர்.ஜே.அனுசுபா.

சைக்கிள்ல லைட் இல்லாம வர்றீயே எவ்வளவு தைரியம்டா உனக்கு?
ஆரம்பத்துல பயமாத்தான் இருந்துச்சுங்க அப்புறம் பழகிப் போயிடுச்சு!
                           மல்லிகை மன்னன்

தலைவரே உங்க பேர்ல விசாரணை கமிஷன் வரப்போவுதாம்!
விசாரணை எப்ப வேணுமின்னாலும் வரட்டும்யா.. முதல்ல கமிஷன் எப்ப வரும்னு கேட்டுச் சொல்லு!
                          வி.சாரதிடேச்சு

சொன்னாக் கேளுப்பா நீ மாமூல் கொடுக்கிறதுக்காக உன் பிறந்த நாளுக்குள்ளாம் போலீஸ் ஸ்டேஷனுக்கு லீவு விட முடியாது!
                            -தென்றல் நாசர்.

இந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?

சின்ன ஊசியா போடுங்கன்ணு சொன்னதுக்கு குண்டூசிய எடுக்கிறாரே!
                   -ஆனந்த் சீனிவாசன்.

உன் மனைவி ஒரு நகைப்பைத்தியம்னு தெரிஞ்சதுதானே அது இப்ப முத்திப் போச்சுன்னு எதை வச்சு சொல்றே!
சூர்ப்பனகை வேணும்னு கேட்டு அடம்பிடிக்கிறாளே!
                   ஜி பொன்ராஜ் குமார்.

என்ன உன் மருமகன் பொங்கலுக்கு வருவாரா?
அட நீங்க வேற அவர் பழைய சோத்துக்கே வருவாரு!
                      ஆர் மஞ்சு பாஷிணி

அந்த நாட்டின் மீது மன்னர் தொடர்ந்து போர் தொடுக்கிறாரே ஏன்?
  அங்கு கவ்விய மண் அவ்வளவு ருசியாம்!
                          சி சாமிநாதன்.

ஒண்ணுமே இல்லாததுக்கா என் அம்மாவும் நீயும் இன்னைக்கு சண்டைபோட்டீங்க அப்படி என்ன விஷயம்?
  உங்களுக்கு மூளை இருக்கா இல்லையான்னுதான்!
                            திருத்துறைப்பூண்டி சேகர்.

தலைவர்தான் ஜெயிச்சிட்டாரே அப்புறம் ஏன் டென்சனா இருக்கார்?
  முதன் முதலா என்ன ஊழல் செய்யலாம்னு இருக்கீங்கன்னு ஒரு நிருபர் கேட்டுட்டாராம்!
                              -கி. ராமு

மீட்டர் நூறு ரூபாய் ஆச்சு வெறும் ஐம்பது ரூபாய் தர்றீங்க!
ஆட்டோவில நீயும்தானேப்பா என் கூட வந்தே!
                                ஜி. லட்சுமிபதி

என்னய்யா இது காலைல தான் ஒரு குற்றப்பத்திரிக்கை வந்துச்சு இப்ப மறுபடியும் வருதே?
   இது மாலைப் பதிப்பு தலைவரே!
                           எஸ்.பி. வளர்மதி


நன்றி : குமுதம் , ஆனந்த விகடன், தினமலர்-வாரமலர்

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த தங்கள் கருத்தினை பதிந்து செல்லலாமே! பதிவு பிடித்திருந்தால் கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2