குழந்தை! கவிதை!

குழந்தை!

அனேகமாக
எல்லோர் வீட்டிலும்
சோறு உண்ணாக் குழந்தைகளை
பிடித்துப்போக
ஒரு ஏமாளி பூச்சாண்டி காத்துக்
கிடக்கிறான். சோறு உண்டபின்
அடித்து விரட்டும் வரையில்

எல்லாக் குழந்தைகளுக்கும்
தெரிந்து விடுகிறது
அப்பா ஆபிஸுக்கு போகும் நேரம்!
வண்டியை கிளப்புமுன்னே ஆஜராகி
அட்டெண்டன்ஸ் போடுகிறது
ஜாலிரைடுக்கு!

போடா! போடி! வாடி!
என்று ஒருமையில்
அழைத்தாலும் உச்சி குளிர்கிறார்கள்
பெரியவர்கள் மழலைமொழியாம்!

தன் கையில் அனைத்திருக்கும்
தம்பி பொம்மைக்கு
சோறுட்டும் குழந்தை தன் பசி
அறிவதில்லை!

எல்லாக் குழந்தைகளும்
ஒற்றுமையாய் இருக்கின்றன
ஒரு விஷயத்தில்
பிடிவாதம்!

எல்லாக் குழந்தைகளுக்கும்
தாத்தாவை பிடித்திருக்கிறது
செல்லம் கொடுப்பதால்
மட்டுமல்ல! பிள்ளை
வளர்ப்பில் பி.ஜி முடித்திருப்பதாலும்!
எல்லாக் குழந்தைகளுக்கும்
தெரிவதில்லை
ஒளிவு மறைவுகள்!
எனவேதான் அவர்கள்
இதயத்தை கொள்ளை கொள்கின்றன.
 தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை இட்டு செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!


Comments

  1. super for ur poems..i enjoy this..

    ReplyDelete
  2. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills videos visit ..

    www.ChiCha.in

    www.ChiCha.in

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2