நித்யானந்தாவை வெளியேறச்சொல்லி இந்து மக்கள் கட்சி ஆர்பாட்டம்
சென்னை : இந்து மதத்தையும் , தர்மத்தையும் தொடர்ந்து அவமதித்து வரும் நித்தியானந்தாவை இந்து மதத்தை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஞானசம்பந்தம் தலைமையில் நித்தியானந்தாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . அப்போது ஞானசம்பந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில் , இந்து மதத்தையும் , இந்து தர்மத்தையும் நித்யானந்தா தொடர்ந்து அவமதித்து வருகிறார் . குண்டலினி யாகம் என்ற பெயரில் தாய்மார்களை அந்தரத்தில் பறக்க விடுவதாக சொல்லி மிகப்பெரிய கேலிக் கூத்தை பிடதி ஆசிரமத்தில் நடத்தி விட்டு அனைவரையும் ஏமாற்றி வருகிறார் . நித்தியானந்தா இந்து மதத்தை விட்டே வெளியேற வேண்டும் . இந்து மக்கள் கட்சிக்கும் , இந்து இயக்கங்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு ரவுடி சாமியாராக உருவாகி இருக்கிறார் நித்தியானந்தா . கோடிக்கணக்கான சொத்துக்களை கொள்ளை அடித்து வைத்திருக்கிறார் . நித்தியானந்தாவின் சொத்துக்களை முடக்க வேண்டும் . பெங்...