நொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்
காரைக்கால்: கடந்த நான்கு ஆண்டுகளாக, பிளாஸ்டிக்கை நொறுக்குத் தீனி போல்
 சாப்பிடும் அரசு பள்ளி மாணவன், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளான்.
காரைக்கால், திருப்பட்டினம் மேலவீதியைச் சேர்ந்த, ஆபிரகாம் மகன் 
சாக்ரடீஸ்,14. திருப்பட்டினம் அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து 
வருகிறான். இவரின் தந்தை, கூலி வேலை செய்து வருகிறார். சாக்ரடீஸ், கடந்த 10
 நாட்களாக, காரைக்கால் அண்ணா கல்லூரியில் நடந்து வந்த, என்.சி.சி., 
முகாமில் கலந்து கொண்டான். முகாமில், சாக்ரடீஸ், பிளாஸ்டிக் ஸ்கேல், சிறிய 
பிளாஸ்டிக் பொருட்களைச் சாப்பிட்டான். இதை, சக மாணவர்கள், என்.சி.சி., 
அதிகாரிகளிடம் தெரிவித்தனர். முகாமிலிருந்த மருத்துவக் குழுவினர், மாணவனை 
பரிசோதனை செய்த@பாது, பிளாஸ்டிக் சாப்பிடுவதால், மாணவனுக்கு எந்தப் 
பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரிந்தது. மாணவனை விசாரித்ததில், அவன் 
நான்கு ஆண்டுகளாக, பிளாஸ்டிக் பொருட்களைச் சாப்பிட்டு வருவதும் தெரிந்தது.
இதுகுறித்து, மாணவனின் தந்தை ஆபிரகாம் கூறுகையில், "பல முறை தடுத்தும், 
தொடர்ந்து பிளாஸ்டிக்கை சாப்பிட்டு வருகிறான்' என்றார். பிளாஸ்டிக் 
சாப்பிடுவதால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும், இனி பிளாஸ்டிக் 
சாப்பிடக் கூடாது என்றும், ஆசிரியர்களும், என்.சி.சி., அதிகாரிகளும், 
சாக்ரடீசை கண்டித்தனர்.
மாணவன் சாக்ரடீஸ் கூறியதாவது: நான், ஐந்தாம் வகுப்பு பயிலும் 
போதே, ஸ்கேல் உட்பட சில பிளாஸ்டிக் பொருட்களைச் சாப்பிட்டு வந்தேன். எனக்கு
 எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பிளாஸ்டிக்கை சாப்பிடுவதால், உயிருக்கு 
ஆபத்து என, பலர் பயமுறுத்தினர். அதனால், இனிமேல் பிளாஸ்டிக்கை சாப்பிடக் 
கூடாது என, முடிவு செய்துள்ளேன். இனி, பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட 
மாட்டேன். இவ்வாறு சாக்ரடீஸ் கூறினான். மேலும் பல மருத்துவ ஆய்வுகளுக்கு, 
சாக்ரடீஸ் உட்படுத்தப்பட உள்ளான் என, அவன் பெற்றோர் தெரிவித்தனர்.
தகவல் உதவி} தினமலர். 
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!
 

 
 
Comments
Post a Comment