போலிஸை துரத்திய போலீஸ்! காமெடி டிராஜடி!

"கார்ல ஒரு பொண்ணை கடத்துறாங்க சார்...'

மதுரையில் கால் டாக்சி டிரைவர் ஒருவர், காரில் வந்து கொண்டிருந்தபோது, ஒரு ஆசாமி, ஒரு பெண்ணை, பலவந்தமாக இழுத்து, காரில் வலுக்கட்டாயமாக ஏற்றுவதைப் பார்த்தார். உடனே, "சார், ஒரு பெண்ணை காரில் கடத்திட்டு போறாங்க...' என, "100'க்கு போன் செய்து, தகவல் தெரிவித்தார்.அதோடு மட்டுமில்லாமல், கடத்தல் காரை பின் தொடர்ந்து சென்று, அந்தக் கார் எந்த ரோட்டில், தெருவில் செல்கிறது என்பதை, "லைவ் ரிப்போர்ட்'டாக, போலீசாருக்குத் தெரிவித்தார். ஒரு வழியாக அந்தக் கார், மாடக்குளத்தில் திருமண வீடு ஒன்றின் முன் நின்றது. அந்தச் சமயத்தில், போலீஸ் ரோந்து வாகனமும், அங்கு வந்து சேர்ந்தது."யாரை கடத்தினீங்க... எங்கே அந்தப் பொண்ணு...' என, கடத்தல் நபரிடம் போலீசார் சரமாரியாக கேட்க, குழப்பமடைந்த அவர், "நான், கரூரில் எஸ்.ஐ.,யாக இருக்கிறேன். எனக்கும், மனைவிக்கும் சின்ன பிரச்னை... காரில் வர மறுத்தாள்; சும்மா ரெண்டு தட்டு தட்டி, ஏற்றினேன். இது தப்பா...' எனச் சொல்ல, அவ்வளவு நேரம் அவரைப் பின் தொடர்ந்து துரத்திய போலீசார், சிரிப்பதா, அழுவதா என அசடு வழிந்தனர்; எனினும், கால் டாக்சி டிரைவரைப் பாராட்ட மறக்கவில்லை!


"நிழல்ல இருக்கறவங்கல்லாம் வெயிலுக்கு வாங்க...!'

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் நடந்தது.ஆர்ப்பாட்டம், முற்பகல், 11.00 மணியளவில் துவங்கியது. மேடையில் தி.மு.க., பிரமுகர்கள் ஏறிய பிறகும், தொண்டர்கள் யாரும் மேடை முன் குவியாமல், வெயில் காரணமாக அருகில் உள்ள கடைகள், ஓட்டல்கள் முன் நின்று கொண்டிருந்தனர். மேடையில் ஏறிய பிரமுகர்கள், கூட்டத்தைக் காணவில்லை என அதிருப்தி அடைந்து, சுற்று முற்றும் பார்த்தபோது தான், தொண்டர்கள், ஆங்காங்கே நிழலுக்காக நின்றிருந்தது தெரிந்தது. உடனே, "மைக்'கைப் பிடித்த ஒருவர், "டீக்கடை, ஓட்டல்கள் முன்னால நிக்குறவங்க எல்லாரும், முன்னாடி வாங்க...' என அழைத்தார்; யாரும் நகரவே இல்லை.கடுப்பான அந்தப் பிரமுகர், "ஏம்பா... ஆர்ப்பாட்டத்திற்கு வந்துட்டு இப்படி ஒதுங்கியிருந்தா எப்படி? நீங்க நிக்குற இடத்துக்கு, நாங்களா வர முடியும்? எல்லாரும் முன்னாடி வாங்கப்பா...' என, குரலை உயர்த்திப் பேசவே, "இப்படி ஆர்ப்பாட்டம் நடத்தி, என்னாங்க ஆகப் போகுது... விலையக் குறைக்கப் போறாங்களா? நீங்க, நிழல்ல நிக்கறீங்க... நாங்க வெயில்ல நின்னு சாகணுமா... வேற ஆளப் பாருங்க...' என, தொண்டர் ஒருவர் ஆவேசமாய் குரல் கொடுத்து, நடையைக் கட்டினார்; பலரும் அவரைப் பின் தொடரவே, பின், யாரையும், "வெயிலுக்கு வாங்க...' எனக் கூப்பிடாமல், மேடையில் இருந்தவர்கள் பேசி முடித்தனர்!

தகவல் உதவி} தினமலர்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2