தளிர் ஹைக்கூ கவிதைகள்! 9

தூக்கில் தொங்கவிட்டு
வேடிக்கை!
குளிர்பான பாட்டில்கள்!


எழுதிவிட்டு
அழிக்க முடியாது!
வாழ்க்கை!

வண்ணப் பூக்கள்
வண்டுகள் மொய்க்கவில்லை!
வாசலில் கோலம்!

மிதிக்க மிதிக்க
உருண்டு ஓடியது!
மிதிவண்டி!

விரட்ட விரட்ட
துரத்துகிறது
தூக்கம்!

ஆட்டம் நின்றது
விடைபெற்றது
காற்று!

காத்து நிற்கையில்
பொறுமை இழக்கிறது
மனசு!

கன்று ஈன்றது
பாலூட்டவில்லை!
வாழை!

விரியாத இதழ்களில்
குடிகொண்டது
மவுனம்!

கீறல் விழுந்ததும்
கீச்சிட்ட வானம்!
இடி மின்னல்!

ஆடை விலக்கியதும்
ருசிக்கவில்லை!
பால்!

சிறகு விரித்தன
வெண் தாமரைகள்
வயலில் கொக்குகள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2