விவசாயியின் கன்றுகுட்டி நண்பன்! ஜோக்!

சமீபத்தில் பொழுது போகாமல் பழைய இதழ்களை புரட்டிப்பார்த்துக் கொண்டிருந்தேன்! அதில் வாரமலர் புத்தகத்தில் படித்த ஜோக் ஒன்று ரசிக்கவைத்தது!. நீங்களும் ரசியுங்களேன்!
    கிராமத்துவிவசாயிக்கு பக்கத்துவீட்டு நண்பன் மனைவி மீது ஒரு கண்... ஒருநாள் மாலையில் மாடுகளை மாட்டுத்தொழுவத்தில் அடைத்து அதன் கதவை மூடாமல் வைத்துவிட்டான்.
   நடு இரவில் எழுந்து கூச்சல் போட்டு நண்பணை எழுப்பினான். ‘மாடுகள் எல்லாம் காட்டுக்குள் ஓடிப்போய்விட்டன. எனக்கு காய்ச்சல் பனியில் போக முடியாது.. நீ போய் மாடுகளை பிடித்துவா’ என்றான்.
  அவன்  தன் மனைவியிடம்சென்று, எனக்கு என்னவோ போல் இருக்கிறது.. நீ போய் மாடுகளை கொண்டுவா.. என்று அவள் காதில் கிசுகிசுத்தான். நண்பன் மனைவியும் புறப்பட்டுப் போய்விட்டாள்.
   கொஞ்ச நேரம் கழித்து, நண்பன் காட்டுக்கு போயிருப்பான் என்று நம்பிய விவசாயி, நண்பனின் மனைவி தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து அறைக்குள் நுழைந்தான்.
    விவசாயியின் நோக்கத்தை புரிந்து வைத்திருந்த நண்பன், உஷாராக மாட்டை அடிக்க வைத்திருந்த கொம்பால் விவசாயியை மாற்றி மாற்றி விளாசினான். வலியை தாங்கிக் கொண்டு சந்தடி இல்லாமல் நண்பனின் வீட்டை விட்டு வெளியேறினான் விவசாயி.
  வீட்டு வாசலில் போய் நின்று நண்பனிடம் கேட்டான். ‘டேய் அறைக்குள் என்ன சப்தம்? என்று.
  நண்பன் சாமானியப்பட்டவனா... ‘கன்றுகுட்டி வந்து போர்வையை கடிச்சது அதான் ரெண்டு போடு போட்டு துரத்தினேன்..’ என்றான்.
  விவசாயி சொன்னான்: என்னதான் இருந்தாலும் வாய் இல்லா ஜீவனை போட்டு இப்படியா அடிக்கிறது என்று!
    எப்படி இருக்கிறது ஜோக்?

உங்கள் கமெண்டுகளை பதிவிட்டு உற்சாக படுத்துங்கள்

Comments

  1. கம்யூட்டர் ஹார்ட் டிஸ்க் எப்படி இயங்குகிறது - வீடியோ! ----- http://mytamilpeople.blogspot.in/2012/06/how-hard-drive-works-in-slowmotion.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2