ராணுவத்துக்கு சேவை செய்வேன் * மனம் திறக்கிறார் தோனி
பூன்ச்:""கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்ற பின், 
இந்திய ராணுவத்துக்கு நிச்சயம் சேவை செய்வேன். இதில் எனக்கு அதிக ஆர்வமாக 
உள்ளது,'' என்கிறார் இந்திய அணியின் கேப்டன் தோனி.
இந்திய 
அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி. இவருக்கு இந்திய ராணுவத்தில் இருந்து 
கவுரவ "லெப்டினன்ட் கர்னல்' பதவி வழங்கப்பட்டது. இதனிடையே, நேற்று 
ஜம்மு-காஷ்மிரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்கு சென்றார். அங்கு
 வீரர்களை சந்தித்தார் தோனி.
இதுகுறித்து பாதுகாப்பு 
அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் "கர்னல்' ஆர்.கே.பால்டா கூறுகையில்,"" 
சர்வதேச அளவில் பிரபலமான தோனியை, தூதராக பெற்றது பெருமையாக உள்ளது. 
இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்களின் செயல்பாடுகளை 
பார்வையிட்ட தோனி, வீரர்களுடன் கலந்துரையாடினார். இது அவர்கள் மனதில் 
உற்சாகத்தை தந்துள்ளது. தவிர, இளைஞர்கள் ராணுவத்தில் சேர தூண்டுகோலாகவும் 
இருக்கும்,'' என்றார்.
இதுகுறித்து கேப்டன் தோனி கூறியது:
கிரிக்கெட்
 போட்டிகளால் தான் இந்தளவுக்கு பிரபலமாக உள்ளேன். இப்போது உங்கள் முன் 
நிற்பதற்கு காரணம் கிரிக்கெட் தான். இதற்கு பாதிப்பு வரும் வகையில் 
எப்போதும் செயல்பட மாட்டேன். கிரிக்கெட் வாழ்க்கை முடிந்த பின், 
ராணுவத்துக்காக நிச்சயம், தீவிர சேவை செய்வேன். இதில் எனக்கு அதிக ஆர்வம் 
உள்ளது.
களத்தில் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்களை பார்க்க 
வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது. தற்போது தான் இவர்களை மிக அருகில் 
சந்திக்கும் வாய்ப்பு வந்துள்ளது. இதுபோன்று எல்லைப் பகுதிக்கு வருவது 
இதுதான் முதன் முறை.
இங்குள்ள அதிகாரிகளின் குடும்பத்தினர் இங்கு
 வந்துள்ளனர். இப்போது தான் இவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு 
கிடைத்துள்ளது. இந்த நாட்கள் அதிக எதிர்பார்ப்பு நிறைந்ததாக இருக்கும் 
என்று உறுதியாக நம்புகிறேன். 
கிரிக்கெட் வேண்டும்:
பொதுவாக
 விளையாட்டுக்கு எவ்வித தடைகளையும் தகர்க்கும் சக்தி உண்டு. இதனால், 
இந்தியா, பாகிஸ்தான் இடையில் போட்டிகளை துவங்குவது முக்கியம். இரு நாட்டு 
கிரிக்கெட் போர்டுகளும் இணைந்து, எப்போது விளையாடுவது என்பதை முடிவு செய்ய 
வேண்டும். இதேபோல நாமும் அங்கு சென்று விளையாட வேண்டும். என்ன நடக்கின்றது 
என பொறுத்திருந்து பார்க்கலாம்.
இவ்வாறு தோனி கூறினார். 
டிஸ்கி}  உண்மையிலேயே தோனி ராணுவத்திற்கு சேவை ஆற்ற முன் வந்தால் நிறைய இளைஞர்கள் ராணுவத்தின் மீது ஆர்வம் கொள்வார்கள்! தோனி விளையாட்டாய் கூறாமல் ராணுவ சேவை செய்வது  சிறப்புதான்!  
தகவல் உதவி} தினமலர்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!
 


 
 
Comments
Post a Comment