ஜப்பானை அதிரவைத்த ரஜினியின் ரோபோ
சூப்பர் ஸ்டார் ரஜினி
நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி, இந்தியாவிலேயே அதிக வசூலைக்
குவித்த படம் என்ற பெருமையைப் பெற்ற எந்திரன் - தி ரோபோ, இப்போது ஜப்பானைக்
கலக்கி வருகிறது.
இந்தப் படத்துக்கு ஜப்பானில் கிடைத்துள்ள ஆதரவு
உலகையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. ரோபோ என்ற மனித எந்திரங்கள்
உற்பத்தியில் உலகின் முதன்மை நாடாகப் போற்றப்படும் ஜப்பானில், ரஜினியின்
ரோபோ திரைப்படம் வெளியாகியுள்ளதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர்
அந்நாட்டு மக்கள்.
ஆரம்பத்தில் இந்தப் படம் அங்கு சில திரைப்பட விழாக்களில் இரண்டு மணி படமாக எடிட் செய்யப்பட்டு வெளியானது.
அங்கு
பலத்த வரவேற்பு கிடைத்தது. பின்னர் அந்த எடிட் செய்த பிரதியையே, நாடு
முழுவதும் வெளியிட்டனர். எத்தனை தியேட்டர்கள் தெரியுமா... தமிழை விட
அதிகம்... 1300 திரையரங்குகள்!
வெளியிட்ட அனைத்து ஜப்பானிய நகரங்களிலும் ரோபோவின் ராஜ்ஜியம்தான். ரஜினி இன்றைக்கு ஜப்பானின் தன்னிகரில்லா சூப்பர் ஸ்டார்.
படம்
வெளியாகி நான்கு வாரங்களுக்குப் பிறகும் கூட்டம் குறையவில்லை. ரோபோ ரஜினி
முகமூடி அணிந்தபடி இரும்பிலே ஒரு இதயம் பாடலை முணுமுணுத்தபடி, மீண்டும்
மீண்டும் படம் வருகிறார்கள் ரசிகர்கள்.
வில்லன் ரஜினி மே... என பழித்துக் காட்டுவாரே... அது அந்த ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம்.
ஆரம்பத்தில் 2 மணிநேரப் படமாக காட்டப்பட்ட ரோபோ, இப்போது 3 மணி நேரப் படமாக மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தகவல் உதவி } தட்ஸ் தமிழ்
தலைவர்னா சும்மாவா...
ReplyDelete