காகிதப்பூக்கள் மணக்கட்டும்


ஆலங்குடி கிராமத்தில் நான் பஸ்ஸை விட்டு இறங்கும்போது சூரியன் உதிக்கவில்லை.தெருக்கள் எல்லாம் பசுஞ்சாணி பூசி கோலப்பொட்டு இட்டுக்கொண்டிருந்தது. அக்ரஹாரத்தினுள் நுழைந்தபோதே என்னை சிலர் வித்தியாசமாய் பார்த்தனர். நான் முரளியின் வீட்டினுள் நுழைந்தேன்.என்னைக்கண்டதும்வறவேற்கும் முரளியின் அம்மா முகத்தை திருப்பிக்கொண்டாள். முரளியின் மாமா, “என்னடா விஸ்வம் நோக்கு விஷயம் தெரியாதோ?,இல்ல நோட்டம்பாக்க வந்தியா?” என்றார்.
             “என்ன மாமா?,என்ன விசயம்?மாமி முகத்தை திருப்பிக்கிறா! நீங்க இப்படி கேக்கறேள்!” என்றேன். “அப்ப உனக்கு விஷயம் தெரியாதோ?” சொன்னாதானே மாமா தெரியும் தெரியும் தெரியாதுன்னு சொல்ல முடியும்.”முரளி விஷயம்” முரளி விஷயமா? முரளிக்கு என்ன அவனை பாக்கதான் வந்தேன் அவன் இங்க இல்லையா? வினாக்களை வரிசையாய் அடுக்க வினோதமாய் பார்த்த மாமா அப்ப நோக்கு ஒண்ணுமே தெரியாதாடா அம்பி என்று முகத்தை இகழ்ச்சி ததும்பமாற்றி அவன் ஒரு பெண்ணோட ஒடிப்போய் மதுரையில செட்டிலாயிட்டான் என்றார்.
           “என்ன மாமாசொல்றேள்! ஒடிப்போயிட்டானா? அதிர்ச்சியுடன் கேட்டேன்.” “ஆமாண்டா அவனை வளர்த்ததுக்கு செஞ்ச உபகாரம் இதுதாண்டா அவனை விட வயசுல பெரியவளான வேற ஸ்திரீக்கூட  ஒடிப்போய் மானத்தை வாங்கிட்டான்.என்றார் கண்கலங்க.
மாமா அழாதீங்கோ! அவன் அப்படிப்பட்டவன் இல்லையே மாமா? எதோ தப்பு நடந்த்திருக்கிறது மாமா ,அவன் அட்ரஸ் இருக்கா என்றேன். ஒடிப்போனப்புறம் லெட்டர் போட்டான் அதுல இருக்கு என்றவர் தேடித்தந்தார்.நான் விடைபெற்று மதுரைக்கு கிளம்பினேன்.
                முரளியும் நானும் சிறுவயது முதலே நண்பர்கள் விதவைத் தாய் மட்டுமே அவனுக்கு.தந்தை சிறுவயதிலேயே இற்ந்துபோனார்.அவர்களை அவனதுமாமாதான் போஷித்து வந்தார்.நாங்கள் சில பெண்களை கிண்டலாக பேசினாலும் அவன் எண்டா அப்படி பண்றேள் என்று கோபிப்பான். பெண்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.எனக்கு வேலை கிடைத்து சென்னையில் தாய் த்ந்தையுடன் குடியேறினேன்.முரளிக்கு அவ்வூரிலேயே வேலை கிடைத்தது.சென்ற வருட விடுமுறையில் கூட முரளியை பார்த்தேன் இதற்குள்ளா மாறி விட்டான். என்னால் நம்ப முடியவில்லை.
           மதுரை பஸ் ஸ்டாண்ட் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த்தது.அந்த சாயங்கால வேளையில் மிகவும் கஷ்டபட்டு அட்ரசை தேடிக்கொண்டு முரளியின் வீட்டை அடைந்தேன். வாசலில் மூன்று வயது குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது.அதற்குள்ளாகவா? “பாப்பா”! அழைத்தேன்.குழந்தை மிரண்டது பின் சுதாரித்து அப்பா யாரோ வந்திருக்காங்கோ என்றது.யாரும்மா செல்லம் என்றபடி வெளியே வந்தவன் “அடடே விஸ்வமா?வாடா உள்ளே எப்படி விலாசம் கண்டுபிடிச்சே?”என்று உள்ளேஅழைத்தான்.
             மல்லிகா; “இது என் ப்ரெண்ட் விஸ்வம் என்றவன் நைட் தங்கிட்டு போலாம்ல” என்றான். “ஆமாண்டா நிறைய பேசனும்” என்னை அழுத்தமாய் பார்த்து தெரியும் என்றான். “மல்லி நாங்க வெளியே போய் வரோம்.நைட் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செஞ்சுடு”.வெளியே நடந்தோம், சிறிது மவுனத்திற்கு பிறகு என்னடா இது?என்றேன். “எது?” “அதான் ஓடிவந்திட்டியாமே மாமா கஷ்டப்படுறார்” “அங்க போய்தான் வந்தியா?” தலையசைத்தேன். “ஒடி வரலைடா ஒரு பொண்ணோட வாழ்க்கை சிறக்க ஒரு விளக்கா வந்தேன்” “என்னடா சொல்றே?” மல்லி என் கூட வேலை பார்த்தவங்கதான் புருஷன் ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாரு.புருஷனை பறிகொடுத்துட்டு இரண்டுவயசு குழந்தையோடு இளம்விதவையா இருந்த அவளை உலகம் புரிஞ்சுக்கலை.பரிதாபபடலை.படுக்கைக்கு அழைச்சுது அவ சாகப்பார்த்தா அப்பதான் நான் தடுத்து வாழ்வு கொடுக்க முன் வந்தேன் முதல்ல மறுத்தாங்க அப்புறம் என்னோட வற்புறுத்தலும் அவங்க நலம் விரும்பிங்க சிலரோட அறிவுரைகளும் கேட்டு என்னை மணக்க சம்மதிச்சாங்க .என்றான்.
             என்ன இருந்தாலும்...இது உனக்கு தேவையாடா? நம்ம குடும்பம் எவ்வளவு ஆச்சாரமானது இப்ப நம்ம சொந்தங்கள் கிட்ட நம்ம மரியாதை என்ன ஆகும்? இதெல்லாம் நீ யோசிச்சியா?
           நம்ம சொந்தங்கள் பத்தி நான் கவலைப்படலே! சின்ன வயசிலே அம்மா விதவையா பட்ட கஷ்டம்தான் என் கண் முன்னாடி நின்னது இதே சொந்தங்கள் அப்ப அம்மாவை எந்த விசேஷத்துக்கும் கூப்பிடாம அமங்கலின்னு விலக்கி வச்சதுதான் கண்முன்னே நின்னுது அம்மா பட்ட கஷ்டம் இந்த மல்லிகா படக் கூடாதுன்னுதான் இந்த முடிவு எடுத்தேன்.
    எல்லாம் சரிடா ஆனா வயசு முக்கியமில்லையாடா?
       “வயசு முக்கியமில்லைடா மனசுதான் முக்கியம்”. “காந்திகூட தன்னைவிட வயசுல மூத்தவங்களைத்தான் கல்யாணம் பண்ணிகிட்டாரு.மத்தவங்களுக்கு பயந்து வாழும் நடுத்தர வர்க்கமா இல்லாம துணிஞ்சு ஒரு விதவைக்கு ஒளி கொடுத்தது தப்பா விஸ்வம்?” என்றான்.
            இல்லடா தப்பே இல்ல நீ ஒடி வரலே ஒரு குடும்பத்துக்கு ஒளி விளக்கா வந்திருக்கே! வா போகலாம் நெகிழ்ச்சியொடு சொன்னேன். (முற்றும்)

(1995ம் வருடம் நான் நடத்திய தேன்சிட்டு கையெழுத்து பத்திரிக்கையில் எழுதிய கதை இது. உங்கள் விமரிசனங்களை தயங்காது அனுப்புங்கள்.)



Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2