தொட்டால்சிணுங்கி இலையில் புதிய வகை ஆடை: கவுகாத்தி ஐ.ஐ.டி., மாணவர் சாதனை

உங்களின் சட்டையோ அல்லது கவுனோ, இலைகளைப் போல, வெளியில் உள்ள கார்பன் -டை- ஆக்சைடை உள்ளே இழுத்து, உங்களின் உடலுக்கு ஆக்சிஜனை தரும் என்ற தகவலை இதுவரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒளிச்சேர்க்கை போன்ற செயலைச் செய்யும் இத்தகைய உடையை கவுகாத்தியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவன (ஐஐடி-ஜி) மாணவர் உருவாக்கியுள்ளார். குழந்தைப் பருவத்தில் இருக்கும்போது, பலர் தொட்டு விளையாடி இருக்கும் தொட்டால் சிணுங்கி இலைகளுடன் நூலை ஒன்றிணைத்து இத்தகைய ஆடையை உருவாக்கியுள்ளார். விளையாடும்போது அணிவதற்கும், மிக சிக்கலான காலநிலைகளில் அணிவதற்கும் இந்த உடை மிகவும் ஏற்றது.
விருது: உயிரியல் தொழில்நுட்பத்திலான இத்தகையை ஆடையை தயாரித்ததற்காக, ராஜதேஷ் நாத் பார்பூயியா, 27, என்பவரும், கவுகாத்தி இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் வடிவமைப்பு பிரிவு பேராசிரியர் பிரதீப் யம்மியாவரும், "சில்வர் டிசைன் விருதை' பெற்றுள்ளனர். டிசைனர்களுக்காக, ஐரோப்பிய டிசைன் சங்கம் இத்தாலியின் கோமோ நகரில் நேற்று ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டுள்ளது. 36 பிரிவுகளில் புதுமையான படைப்புகளை உருவாக்கியுள்ளவர்களும், நிறுவனங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். "தங்களின் தயாரிப்பான "உயிரி ஆடை'யானது, தொட்டால்சிணுங்கி தாவரத்துடன் வழக்கமான நூலைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒன்றும் அதிக செலவிலானது அல்ல' என்கிறார் கவுகாத்தி ஐ.ஐ.டி.,யில் இந்த ஆண்டு வடிவமைப்பு பிரிவில் முதுகலைப் பட்டம் முடிக்கும் பார்பூயியா. "இந்த ஆடையானது வெளிப்புற சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் மாறும் தன்மை கொண்டது. இந்த வகை ஆடையை அணிபவர், வியர்வையில் நனையாமல் இருப்பதோடு, ஆக்சிஜன் குறைவான இடங்களில், அதை சீர் செய்யும் வகையில், உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் தரும் தன்மையும் கொண்டது' என்றும் அவர் மேலும் கூறினார்.

நோக்கம் என்ன? பார்பூயியாவுக்கு இந்த ஆடை தயாரிக்க உதவிய யம்மியாவர் கூறுகையில், ""மாறும் தொழில்நுட்பத்திலான இந்த ஆடையைத் தயாரிக்க எங்களுக்கு ஆறு மாதம் ஆனது. கடந்த ஆண்டு மே மாதம்தான் இதைத் தயாரித்தோம். இயற்கையான முறைகளில் உள்ள அடிப்படையான மற்றும் புதுமையான விஷயங்களையும், செயற்கையான முறையில் அவற்றை எப்படி இணைத்து அமல்படுத்துவது என்பதையும் வெளிப்படுத்துவதே தயாரிப்பின் நோக்கம்,'' என்றார். பார்பூயியாவுடன் படிக்கும் மஞ்சுநாத் பூட்டா என்பவர், தெரு வியாபாரிகள் மற்றும் பொருட்களை கூவி விற்பவர்களுக்கான, எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய, மடக்கும் வசதி கொண்ட சிறிய அளவிலான அலமாரி ஒன்றைத் தயாரித்து, தேசிய புதிய கண்டுபிடிப்புகள் கவுன்சிலின் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்கி}  சாதனை படைத்த மாணவருக்கு வாழ்த்துக்கள்!

தகவல் உதவி} தினமலர்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2