பெண் வேடத்தில் பாதாள அறையில் நித்தியானந்தா! பரபரப்பு தகவல்கள்!
பெங்களூர்: நித்தியானந்தா தலைமறைவாகி ஓடிப் போய் விட்டதால், பிடதி
ஆசிரமத்தில் இதுநாள் வரை தங்கியிருந்த ஆண்களும், பெண்களும் மடத்தைக் காலி
செய்து வருகின்றனர். இன்று மடத்திற்கு சீல் வைக்கவுள்ளனர் போலீஸார்.
நித்தியானந்தாவைப்
பிடிக்க வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு விட்டது. ஆசிரமத்தைப் பூட்டி சீல்
வைக்கவும், சோதனை நடத்தவும், ஆதாரங்களைக் கைப்பற்றவும் கர்நாடக முதல்வர்
கெளடா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், நித்தியானந்தாவும்
தலைமறைவாகி ஓடி விட்டார். இதனால் ஆசிரமத்தில் தங்கியிருந்த ஆண்களும்,
பெண்களும் மூட்டை முடிச்சுகளுடன் மடத்தைக் காலி செய்து வருகின்றனர்.
அனைவரும்
இடத்தைக் காலி செய்த பின்னர் மடத்தை அதிகாரிகள் மூடி சீல் வைப்பார்கள்
என்று தெரிகிறது. அதற்கு முன்பாக நித்தியானந்தா மீதான புகார்கள் தொடர்பான
ஆதாரங்களை போலீஸார் கைப்பற்றுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில்
உள்ள நித்தியானந்தா மடத்தில் தங்கியிருந்த ஆர்த்தி ராவ் என்ற
நித்தியானந்தாவின் பக்தையை அவர் பாலியல் ரீதியாக சீரழித்ததாக நித்தியானந்தா
மீது லேட்டஸ்டாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கேள்வி கேட்கப்
போய்த்தான் கன்னட சுவர்ணா டிவி சேனல் செய்தியாளரை நித்தியானந்தா
ஆதரவாளர்கள் தாக்கிஅடித்து விரட்டினர் என்பது நினைவிருக்கலாம். நித்தியோட சித்தியில லயிச்ச ஆர்த்திக்கு இப்பத்தான் புத்தி வந்ததுதாமா? கொய்யாலே அப்பவே போட்டு தாக்கியிருக்க வேணாமா? இந்த மாதிரி பெண்கள் சாமிகள் பின்னால் ஓடும் வரை அவர்களுக்கு ஜாலிதான்!
கர்நாடக போலீஸாரின் பிடியில் சிக்காமல் தப்பி ஓடி வரும் நித்தியானந்தா,
பெண் வேடத்தில் அதாவது சுடிதார் அணிந்து தப்பி வருவதாக ஒரு தகவல்
கூறுகிறது.
மேலும் அவர் சுடிதார் உடையில், மதுரை ஆதீன மடத்திற்கு
நள்ளிரவில் வந்ததாகவும் ஒரு தகவல் உள்ளது. இதுகுறித்து மதுரை உளவுத்துறை
போலீஸாருக்கும் தகவல் கிடைத்துள்ளதாம். மேலிட உத்தரவுக்காக அவர்கள்
காத்துள்ளனராம். மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தா இருப்பது உறுதியானால்,
மேலிடம் பச்சைக் கொடி காட்டினால், அவரை கர்நாடக போலீஸாரிடம் பிடித்துத் தர
மதுரை போலீஸார் ஆயத்தமாக இருப்பதாக தெரிகிறது.
கடந்த
ஞாயிற்றுக்கிழமை, மதுரை ஆதீன மடத்திலிருந்து ஒரு கார் நள்ளிரவுக்கு மேல்
புறப்பட்டுச் சென்றுள்ளது. சமயநல்லூர் அருகே புறவழிச் சாலையில், அந்தக்
காரில் ஒரு சுடிதார் போட்ட பெண் ஏறினாராம். அந்தப் பெண்ணை அதிகாலையில்
மதுரை ஆதீன மடத்திற்கு பின் கேட் வழியாக கூட்டி வந்துள்ளனர்.
பிறகு
அவர் உள்ளே சென்றார்.மதுரை ஆதீனத்தின் அறைக்கு அவர் போயுள்ளார். அவர் வேறு
யாருமல்ல, நித்தியானந்தாதான் என்று கூறுகிறார்கள். பெண் வேடமிட்டு அவர்
தப்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.
நான் ஆணும் அல்ல பெண்ணும் இல்லேன்னு சொன்னாலும் சமயத்துல தப்பிக்க பெண் வேடம் தான் உதவுச்சு போல! கடவுள் பெயரை சொல்லி கல்லா கட்டற ஆசாமிகளுக்கு நல்லா எடுக்கணும் சுளுக்கு
பெருந்துறை அருகே உள்ள பல்லகவுண்டன் பாளையத்தில் நித்தியானந்தாவின்
முதன்மை சீடர்களில் ஒருவரது வீடு இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு 3
கார்களில் சாமியாரும் நீண்ட முடியுடன் கூடிய சீடர்களும் நேற்று
வந்திறங்கியதை பொதுமக்கள் பார்த்தும் உறுதி செய்தும் உள்ளனர். இத்தகவல்
காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பண்ணை வீட்டில் உள்ள
பாதாள ரகசிய அறையில் பதுங்கி இருந்தபடியே வழக்கறிஞர்கள் மற்றும்
சீடர்களுடன் எப்படி எஸ்கேப்பாவது என்று குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகக்
கூறப்படுகிறது. நித்தியானந்தாவுக்கு அமைக்கப்பட்டுள்ள பாதாள ரகசிய அறைகள்,
சதாம் உசேன் எப்படி பதுங்கி இருந்தாரோ அதேபோல் உருவாக்கப்பட்டிருப்பதாகவும்
கூறப்படுகிறது,
இந்நிலையில் கர்நாடக காவல்துறையினர் கேட்டுக்
கொண்டால்மட்டும் அவர்களுக்கு உதவ முடியும் என்று ஈரோடு காவல்துறை
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்படி பிரெஸ்டீஜ் பார்த்துகிட்டு இருந்தா ஆசாமி சிங்கிள் கேப்ல எஸ்கேப் ஆயிடுவாரு! அம்மா காஞ்சி சாமியார் மேல கைவச்ச மாதிரி துணிச்சலா களம் இறங்குங்க! உங்க இமேஜ் கொடிகட்டி பறக்கும்
தகவல் உதவி} தட்ஸ் தமிழ்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!
Comments
Post a Comment