அண்ணா மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து! சென்னையில் பரபரப்பு!
சென்னை அண்ணா சாலையில் அண்ணா மேம்பாலத்திலிருந்து வடபழனி செல்லும் 17 எம் என்ற பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதில் ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும் காயமடைந்தவர்கள் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
சென்னையில் பல்வேறு கோரமான விபத்துக்கள் நிகழ்ந்திருந்தாலும் பாலத்தில் இருந்து அதுவும் அண்ணா மேம்பாலத்தில் இருந்து குப்புற கீழே விழும் பஸ் விபத்து இதுவரை நடந்தது இல்லை. இதனால் பொதுமக்கள் மனதில் பீதியுடன் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
விபத்திற்கு காரணம் பேருந்தின் ஓட்டுனர் அலைபேசி பேசியபடி ஓட்டியதும். வளைவு திருப்பத்தில் அவரது இருக்கை கழன்று கொண்டு பேலன்ஸ் தடுமாறி கட்டுப்படுத்த முடியாமல் பாலத்தை உடைத்துக் கொண்டு கீழே பாய்ந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
ஓட்டுனர்களே உங்களை நம்பித்தான் பயணிகள் பேருந்துகளில் பயணிக்கிண்றனர். அவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் என்று பலவித கடமைகள் உண்டு. விபத்துக்கள் எதிர்பாராதவை என்றாலும் இது போன்ற விபத்துக்கள் நாமே வரவழைத்துக் கொள்பவைதானே. பேருந்து ஓட்டும்போது அலைபேசியில் பேசுவது ஏன்? பெரும்பாலான ஓட்டுனர்கள் அவ்வாறு பேசியவாறேத்தான் ஓட்டுகிறார்கள்.
இன்னும் சிலர் புகை பிடித்துக் கொண்டும் ஓட்டுகிறார்கள் பேருந்தில் புகை பிடிக்க கூடாது என்ற சட்டம் ஓட்டுனர்களுக்கு கிடையாதா? நாம் அழைத்துச் செல்வது பயணிகள் மட்டுமல்ல அவர்களின் குடும்பங்களையும் என்ற நினைவு ஓட்டுனர்களுக்கு வேண்டும். நிர்வாகமும் கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் இது மாதிரியான விபத்துக்களை தவிர்க்கலாம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!
Comments
Post a Comment