இறப்பிலும் இணைந்த முதலாளி - தொழிலாளி...!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக இருந்து வந்த புகைப்பட கலைஞர் சித்ரா சுவாமிநாதன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 64. தமிழ் சினிமாவில் தொப்பி சித்ரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர் சித்ரா சுவாமிநாதன். சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து விழாக்களிலும் இவரை காணமுடியும். இவரிடம் சினிமா துறை சம்பந்தமான பல அரிய புகைப்படங்கள் இவரிடம் உண்டு.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்கும் புகைப்பட கலைஞராக இருந்துள்ளார். நடிகர்கள் ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கு மிக நெருக்கமானவராக இருந்துள்ளார். புகைப்படத் துறையில் நவீனம் புகுந்த காலகட்டத்தில், சித்ரா மட்டும் சாதாரண கேமிராவை வைத்திருப்பதைப் பார்த்த ரஜினி, வெளிநாட்டிலிருந்து நவீன கேமரா ஒன்றை வரவழைத்து தன் பரிசாகக் கொடுத்தார். மேலும் விழாக்களில் சாதாரண ரசிகர்கள் கூட வி.ஐ.பி.க்களுடன் இணைந்து போட்டோ எடுத்து கொண்டால் அதற்கு எவ்வளவு தொகை ஆனதோ அதை மட்டும் வாங்கிகொள்வார், கூட ஒரு பைசா கூட வாங்கியதில்லை.

இந்நிலையில் இதயநோய் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயால் அவதிப்பட்டு வந்த சித்ரா சுவாமிநாதன், கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் மரணம் அடைந்தார். மறைந்த சித்ரா சுவாமிநாதனுக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இதில் மகன் ஜானும் புகைப்பட கலைஞராக உள்ளார்.

மறைந்த சித்ரா சுவாமிநாதன் பல திரையுலக சங்கங்கள்  மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட சிறு பெரு பத்திரிக்கைகள் உள்ளிட்டவைகளுக்கு ஆஸ்தான புகைப்பட கலைஞராக இருந்து வந்தாலும், நேற்று முன்தினம் மறைந்த முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர்.ஜி மீது மிகுந்த பற்று கொண்டவர். எப்போதும் அவரை முதலாளி முதலாளி என்று திரையுலக வி.ஐ.பி.க்கள் போன்று அழைக்கும் அளவிற்கு அவர் மீது பற்று கொண்ட அவரது ஆஸ்தான புகைப்பட கலைஞரும் கூட. அப்படி புகழ்வாய்ந்த தனது முதலாளி மறைந்த ஒரு சில தினங்களில் சித்ரா சுவாமிநாதனும் மறைந்தது வியத்தகு விஷயமாகும்...!

மறைந்த சித்ரா சுவாமிநாதன் உடல் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்து வருகின்றனர். அன்னாரது இறுதிசடங்கு நாளை 22.06.12 நடைபெறுகிறது

தகவல் உதவி} தினமலர்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2