மலிங்காவிற்கு இலங்கை அணியில் ஆட 2 ஆண்டுகள் தடை?

கொழும்பு: இலங்கை அணியின் வேகபந்துவீச்சாளர் மலிங்கா, இலங்கை அணிக்காக விளையாடுவதை தவிர்த்துவிட்டு, ஐபிஎல் 5 தொடரில் பங்கேற்றார். இதனால் அவருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகபந்துவீச்சாளர் மலிங்கா. சிறப்பாக பந்துவீசும் மலிங்கா, கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் 5 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் வந்த பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டியில் பங்கேற்று வந்தது. இருப்பினும் அதில் பங்கேற்காத மலிங்கா, ஐபிஎல் தொடரின் போட்டிகளில் பங்கேற்றார்.
மேலும் குறைந்த சம்பளம் காரணமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்தத்தை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மலிங்காவின் நடவடிக்கைகளை கண்டித்து அவர் இலங்கை அணியில் விளையாட 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கூறியதாவது
நானும் வேகபந்துவீச்சாளர் மலிங்காவின் ரசிகன் தான். அதற்காக அவர் செய்யும் எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருக்க முடியாது. மலிங்காவின் மீதான நடவடிக்கை குறித்து அவருக்கு நினைவுப்படுத்தி உள்ளோம்.
அதில் தேசிய அளவிலான எந்த விளையாட்டு வீரர், அவர் சார்ந்துள்ள விளையாட்டு வாரியத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் குறிப்பிட்ட வீரருக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் விளையாட்டு வீரர்களின் தவறான நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ளியேறிய தீர்மானித்துள்ளோம். இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தின்படி நாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது 2 வாரங்கள் நாட்டில் தங்கியிருக்க வேண்டும்.
ஆனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற பல இலங்கை வீரர்கள், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது சில நாட்கள் மட்டும் இலங்கையில் இருந்துள்ளனர். இதற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள பல வீரர்களும், கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் உள்ளதாக தெரியவந்துள்ளது. எதிர்காலத்தில் விளையாட்டு வீரர்கள் இது போன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், 2 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்படும் என்றார்.
ஆனால் இந்த ஆண்டிற்கான ஒப்பந்தம் குறித்து தனக்கு எதுவும் அறிவிக்கவில்லை என்று மலிங்கா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது
இலங்கை கிரிக்கெட் அணியில் இந்த ஆண்டிற்கான ஒப்பந்தம் குறித்து எந்த வீரருக்கு அறிவிக்கபடவில்லை. மேலும் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் நான் நாட்டிற்காக விளையாட தயாராக உள்ளேன். இதற்காக நான் விளையாட தீர்மானித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்பது முக்கியமல்ல. இலங்கை அணிக்கான ஒருநாள் மற்றும் டுவென்டி20 போட்டிகளில் விளையாட நான் தேர்வாகி உள்ளேன் என்றார்.
வரும் செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பை தொடரின் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் மலிங்கா. இந்த நிலையில் இலங்கை விளையாட்டு வாரியத்தால் 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்படும் பட்சத்தில் அத்தொடரின் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

டிஸ்கி} காசுக்காக விளையாடும் மலிங்கா தாய்நாட்டையும் நினைத்துப் பார்க்க வேண்டும். எத்தனையோ ரசிகர்கள் அவருக்கு இருந்தாலும் தாய்நாட்டிற்கு விளையாடினால்தான் அவரை போற்றுவார்கள். கொஞ்ச காலம் முன் இவர் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்தவர்தான்! இவரைப் போன்றவர்களுக்கு இந்த தடை ஒருபாடமாக அமையும்!

 தகவல் உதவி} தட்ஸ் தமிழ்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கமெண்ட்களை அள்ளி வீசலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2