நியாயம்! ஒருபக்ககதை!

நியாயம்!


ஒவ்வொரு முறையும் ராகவனோடு கடைக்கு போகையிலும் கவனித்தாள் கோமதி. வெத்தலை பழம் பூ போன்றவைகளை அந்த கிழவியிடமே வாங்குவான். வேறு பலர் கூப்பிட்டாலும் காதிலேயே வாங்க மாட்டான்.
  இத்தனைக்கும் அந்த கிழவி கறார் விலைதான் சொல்லுவாள் பத்து பைசா குறைக்கமாட்டாள். எல்லோரிடமும் பேரம் பேசி பொருள் வாங்கும் கோமதிக்கு கூட இந்த கிழவியிடம் பாச்சா பலிக்கவில்லை!
 ஏம்மா என்கிட்ட ஒரே விலைதான்! இஷ்டமானா வாங்கு! இல்லை போயிகினு இரு! என்பாள் அந்த கிழவி எத்தனையோ முறை இப்படி சொல்லிவிட்டாள். ஆனால் ராகவன் தான் விடாப்பிடியாக இந்தகிழவியிடம்தான் வாங்குவேன் என்று அடம்பிடித்து வாங்குகிறான்.
   அன்று ராகவன் கடைக்கு வரவில்லை என்றதும் கோமதிக்கு நிம்மதியாக இருந்தது! இன்று அந்த கிழவியிடம் வாங்காமல் வேறு எங்காவது வாங்கி கொள்ளலாம்! எப்படி கறாராக பேசுகிறாள்? என்னை போல ஒரு நாலு வாடிக்கைகளை இழந்தால்தான் புத்தி வரும் என்று சபித்தாள்.
  அவள் தேவையான் பழம் வெத்தலைகளை வேறு கடையில் பேரம் பேசி வாங்கி கொண்டு வருவதை பார்த்தாள் கிழவி! நல்லா பாரு! இன்று எவ்வளவு குறைத்து வாங்கிப் போகிறேன் தெரியுமா? ஊரிலேயே நீ ஒருத்திதான் வியாபாரம் செய்வது போல பேசினாயே! இன்று ஒரு வாடிக்கை இழந்து விட்டது என்று அழு! என்று மனதினுள்பொறுமியபடி காணாதது போல வீட்டுக்கு வந்து விட்டாள்.
   அன்று மாலை வீட்டுக்கு வந்த ராகவனிடம் நடந்ததை கூறினாள் கோமதி. என்னமோ அந்த கிழவிதான் பழம் விக்கிறாப்போல அவகிட்டேயே வாங்கி காசை வேஸ்ட் பண்ணீங்களே? இன்னிக்கு எவ்வளவு மிச்சம் பிடிச்சிருக்கேன் பார்த்தீங்களா? என்று பெருமிதம் பட்டுக் கொண்டாள்.
  காசு மிச்சம் பிடிச்சு சாதிச்சிட்டுதா நினைக்காதே எனக்கும் தெரியும் அந்த கிழவி அதிகமாத் தான் விற்குதுன்னு! ஆனா யோசிச்சு பாரு அதுக்கு ஒரு எழுபது வயசுக்கு மேல இருக்கும் இந்த வயசிலயும் உழைச்சு சாப்பிடனும்னு நினைக்குது உடம்பு நல்லா இருக்கிறவங்களே வேசம் போட்டு பிச்சை எடுத்து சம்பாதிக்கிற காலத்தில வயசான காலத்திலேயும் உழைக்க நினைக்கிற அந்தம்மாவுக்கு நான் கொடுக்கிற மரியாதைதான் அவங்க கிட்ட பொருள் வாங்கிறது என்றான்ராகவன்!
  கணவனின் கருத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்த கோமதி நானும் இனிமே அந்தம்மாகிட்டேயே வாங்கிறேங்க என்றாள்! 

 டிஸ்கி}
 தமிழ் தோட்டம் கதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற எனது சிறுகதை! 

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து உற்சாகப்படுத்துங்கள்!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2