குடியரசு துணைத் தலைவர் வீட்டில் ஒரு ஆண்டுக்கு 171 சமையல் கியாஸ் சிலிண்டர்கள்
குடியரசு துணைத் தலைவர் ஹமீத் 
அன்சாரி ஓராண்டில் தமது வீட்டில் 171 சமையல் கியாஸ் சிலிண்டர்களை 
பயன்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக வீடுகளுக்கு 
விநியோகிக்கப்படுகிற சமையல் கியாஸ் சிலிண்டர்களைப் பொறுத்தவரையில் ஒரு 
சிலிண்டர் வாங்கி 21 நாட்கள் கழிந்த பிறகுதான் அடுத்த சிலிண்டருக்கு பதிவு 
செய்ய முடியும். ஆனால் இந்த விதிமுறைகள் அனைத்துமே குடியரசு துணைத் தலைவர் 
உள்ளிட்ட பிரபலங்களுக்காக மீறப்பட்டிருக்கின்றன.
ஓர் ஆண்டில் அதிக 
சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தியவர்களின் பட்டியலின்படி பார்த்தால், 
டெல்லி பிருதிவிராஜ் சாலையில் உள்ள பிரபல தொழில் அதிபர் நவீன் ஜிண்டாலின் 
இல்லத்துக்கு 369 சிலிண்டர்கள் விநிநோகிக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு ஒரு 
சிலிண்டருக்கும் அதிகமாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
குடியரசு 
துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் அதிகாரபூர்வ இல்லத்தில் 171 
சிலிண்டர்களும், அமைச்சர் பிரணீத் கவுரின் வீட்டில் 161 சிலிண்டர்களும், 
டெல்லியில் உள்ள உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவின் வீட்டில் 83 
சிலிண்டர்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
பாரதீய ஜனதா மூத்த தலைவர் 
ராஜ்நாத் சிங்கின் வீட்டுக்கு 80 சிலிண்டர்களும், முன்னாள் மத்திய மந்திரி 
எம்.எஸ்.கில் வீட்டுக்கு 79 சிலிண்டர்களும், பாரதீய ஜனதா எம்.பி. மேனகா 
காந்தி, காங்கிரசைச் சேர்ந்த சுரேஷ் கல்மாடி ஆகியோரின் வீடுகளுக்கு தலா 63 
சிலிண்டர்களும், சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங்கின் வீட்டுக்கு 58 
சிலிண்டர்களும், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவின் வீட்டுக்கு 49 
சிலிண்டர்களும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, லோக் ஜனசக்தி தலைவர் 
ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரின் வீடுகளுக்கு தலா 45 சிலிண்டர்களும், 
ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்தின் வீட்டுக்கு 43 சிலிண்டர்களும், 
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் வீட்டுக்கு 42 சிலிண்டர்களும் சப்ளை 
செய்யப்பட்டு இருக்கின்றன.
டிஸ்கி} வயிறு எரியுதுல்ல! நாம சிலிண்டருக்கு மாசக் கணக்கா காத்து கிடக்க இலவசமா இவங்க அனுபவிக்கிறதோட அதிகமாகவும் உபயோக படுத்தறாங்க! விளங்கிடும் சாமீ!
தகவல் உதவி} தட்ஸ் தமிழ்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! 

Comments
Post a Comment