97000= 1000 கரூர் வைஸ்யாவின் கருணை!
வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை 97 ஆயிரம் ரூபாயில், லோக் அதாலத்
மூலம் வெறும் 1,000 ரூபாய் மட்டுமே செலுத்துவது என செட்டில்மென்ட்
ஏற்பட்டது.
கரூர் வைஸ்யா வங்கியில் கடன் பெற்றவர்கள் தொடர்பான வழக்குகள், லோக்
அதாலத் எனும் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. லோக்
அதாலத்துக்கு, மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கணேசன்
ஏற்பாடு செய்திருந்தார். இந்த லோக் அதாலத்தில், கை விரல்களை இழந்து
கஷ்டப்படும் தொழிலாளிக்கு யோகம் அடித்தது. பொன்னேரி தாலுகாவில் உள்ள
மலிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர் கரூர் வைஸ்யா
வங்கியில் தனிநபர் கடன் பெற்றிருந்தார். வட்டியுடன் சேர்த்து 96 ஆயிரத்து
903 ரூபாய் வங்கிக்கு அவர் திருப்பிச் செலுத்த வேண்டும். அவரால் செலுத்த
முடியவில்லை. காரணம், தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் அவரது வலது கையில்
ஐந்து விரல்களும் துண்டிக்கப்பட்டன. இதனால், அவரால் வேலைக்கு சென்று
சம்பாதிக்க முடியவில்லை; வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனையும் செலுத்த
முடியவில்லை. இவரது வழக்கு, லோக் அதாலத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்தது. மனிதாபிமான அடிப்படையில்
தர்மலிங்கத்தின் நிலையை வங்கி அதிகாரிகள் பரிசீலித்தனர். கடைசியில், வெறும்
1,000 ரூபாய் மட்டும் வங்கிக்கு செலுத்தினால் போதும் என, முடிவெடுத்தனர்.
ஆயிரம் ரூபாயை தர்மலிங்கம் அப்போதே செலுத்தினார்.
தகவல் உதவி} தினமலர்
பகிர்வுக்கு நன்றி !
ReplyDelete