"பிராந்தியமொழியும்! சாராயமொழியும்! நான் ரசித்த சிரிப்புக்கள் 14

நான் ரசித்த சிரிப்புக்கள்!

அய்யா! பசிக்குது!
வேலை செய்து பிழைக்க வேண்டியதுதானே!
வேலை செஞ்சா இன்னும் கூடுதலா பசிக்குமே சாமீ!
                  பி,ஜி.பி இசக்கி

அந்த முதியவர் எதையும் கரெக்டா செய்வாரா எப்படி?
 உதயகுமார்ங்கிற தன் பெயரை இப்ப வயசானதும் அஸ்தமனகுமார்னு மாத்திகிட்டாரே!
                  மித்ரா 
தலைவர் முடி வெட்டிக்க ஏன் டாஸ்மாக் போறாரு?
  அங்க கட்டிங்க் உண்டுன்னு சொன்னாங்களாம்!
                    பி. பாலாஜி கணேஷ்.

தலைவரை ஜெயில் வாழ்க்கை ரொம்பவே பாதிச்சிட்டதா எப்படி சொல்றே?
 சொந்த ஜாமின் கிடைக்கலன்னா வாடகை ஜாமினுக்காவது ஏற்பாடு பண்ணுங்கண்ணு சொல்றாரே!
                       அ. பேச்சியப்பன்.

அவர் ஒரு போலி கேமரா மேன்னு எப்படி சொல்றே?
 ரொம்ப காலத்துக்கு கண்காணிப்பு கேமராமேனா பணியாற்றினதா பீத்திக்கிறாரே!
                       லெ.நா.சிவக்குமார்.
உங்களை புகழ்ந்து நூல் இயற்ற சொன்னதை  புலவர் தப்பா புரிஞ்சிகிட்டார் மன்னா?
 எப்படி?
பஞ்சு கேட்கிறாரே?
                  சிக்ஸ் முகம்

தலைவர் பெரிய ‘கலாரசிகர்’னு எப்படி சொல்றே?
இல்லாவிட்டால் ‘கலா’வுக்கு இத்தனை சின்னவீடு கட்டிக் கொடுத்திருக்கமாட்டாரே!
                    கருணைவள்ளல்.

இது ஒரு டூபாக்கூர் ஆஸ்பத்திரின்னு எப்படி சொல்றே?
 ஆபரேஷன் தியேட்டருக்கு டிக்கெட் கிழிக்க ஆட்கள் தேவைன்னு எழுதி மாட்டியிருக்காங்களே!
                    லெ.நா.சிவக்குமார்.

எங்கள் தலைவரை ஊழல் பெருச்சாளி என்று சொல்வதை வண்மையாக கண்டிக்கிறோம்.. வேண்டுமானால் ‘ஊழல்சிங்கம்’ என்று சொல்லிவிட்டு போங்கள்!
                           அனார்கலி.

தலைவர்கிட்ட பொது அறிவுக் கேள்வி கேட்டது தப்பா போச்சா ஏன்?
நம் நாட்டின் தேசிய விலங்கு எதுன்னு கேட்டா கைவிலங்குன்னு சொல்றார்!
                        முகிலன்.

தலைவர் கோடிஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்துகிட்டு மானத்தை வாங்கிட்டார்!
அப்படி என்ன பண்ணினார்?
நிகழ்ச்சியில் உங்க அப்பா பெயர் என்னன்னு கேட்டதுக்கு நாலு ஆப்ஷன் கொடுங்கண்னு கேட்டுட்டார்!
                    க.சரவண குமார்

நம்ம கட்சி பத்திரிக்கையை கட்சிக்காரங்களே படிக்கிறதில்லைன்னு தலைவர் வருத்தப்படறாரே?
  பின்னே நம்ம ஆளுங்களுக்கு தான் குற்றபத்திரிக்கை படிக்கவே நேரம் சரியா இருக்கே!
                   பர்வீன் யூனுஸ்.

நம்ம கட்சியில நிறைய கறுப்பு ஆடுகள் இருக்குன்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பா போச்சு!
ஏன்?
கட்சி கூட்டத்துக்கு எல்லாம் இனிமேல் சிக்கன் பிரியாணிக்கு பதில் மட்டன் பிரியாணியா போடச் சொல்றார்!
                    அ. பேச்சியப்பன்.

உன் லவ்வருக்கும் உனக்கும் எப்போ கல்யாணம்?
தெரியலை.. ‘பீச்’சு வார்த்தை நடத்திகிட்டு இருக்கோம்!
                       வீ விஷ்ணுகுமார்.

தலைவர் ஏன் சிபிஐ மேல கோபமா இருக்காரு?
குற்றபத்திரிக்கையை பேப்பர் போடற பையன்கிட்ட கொடுத்தனுப்பினாங்களாம்!
                      பெ. பாண்டியன்.

தலைவர் அடி முட்டாள்னு எப்படி சொல்றே?
பிராந்தியமொழிக்காக போராடுறவங்க ஏன் சாராய மொழிக்காக போராட மாட்டேங்கிறாங்கன்னு கேக்கறாரு!
                           சி. சாமிநாதன்.
நன்றி வாரமலர்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கமெண்ட்களை பதிந்து உற்சாக படுத்துங்கள்!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2