சச்சின் மகனுக்கு கிரிக்கெட் அணியில் இடம்!
சச்சின் டெண்டுல்கரின் மகன்
அர்ஜூன் டெண்டுல்கருக்கு ஒரு வழியாக கிரிக்கெட் அணி ஒன்றில் இடம்
கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 14 வயதுக்குட்பட்டோருக்கான
பயிற்சி முகாமில் சச்சின் மகனும் சேர்க்கப்பட்டுள்ளார்.
சச்சின்
டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர். இவரும் அப்பாவைப் போல கிரிக்கெட்
ஆடி வருகிறார். சச்சினும், இவரும் சேர்ந்து இந்திய அணியில் விளையாடுவார்கள்
என்றுகூட அவ்வப்போது கிண்டலடித்து செய்திகள் வரும். சச்சின் தனது 100வது
சதத்தை எடுக்க தடுமாறிக் கொண்டிருந்தபோது சச்சினும், அர்ஜூனும் சேர்ந்து
ஆடுவது போலவும், அப்போது சச்சின் 99 ரன்களுடன் இருப்பது போலவும், அர்ஜூன்
சதம் அடித்திருப்பது போலவும் கூட கிராபிக்ஸ் காட்சிகளை வெளியிட்டு அலப்பறை
செய்தார்கள்.
இந்த நிலையில் அர்ஜூன் டெம்டுல்கருக்கு மும்பை
கிரிக்கெட் சங்கத்தின் 14 வயதுக்குட்பட்டோருக்கான அணியில்இடம் கிடைக்கும்
சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 14 வயதுக்குட்பட்டோருக்கான பயிற்சி முகாமில்
அர்ஜூன் டெண்டுல்கரும் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் நடந்த
சங்கத்தின் 14 வயதுக்குட்பட்டோருக்கான சோதனை ஆட்டத்தின்போது சதம்
அடித்திருந்தார் இடது கை ஆட்டக்காரரான அர்ஜூன் என்பது நினைவிருக்கலாம்.
தற்போது 12 வயதாகும் அர்ஜூன், ஜிம்கானா அணிக்காக ஆடி வருகிறார்.
அர்ஜூன்
டெண்டுல்கர், இடது கை வேகப்பந்து வீச்சாளரும் கூட.1999ம் ஆண்டு செப்டம்பர்
24ம் தேதி பிறந்த அர்ஜூன் தனது தந்தையுடன் பலமுறை இந்திய அணியின் பயிற்சி
முகாம்களில் தலை காட்டி வருகிறார். மேலும் இந்திய வீரர்களுடனும் அவர்
பயிற்சிகளில் பங்கேற்பதுண்டு. இப்போது அவருக்கு 14 வயதுக்குட்பட்டோருக்கான
அணியில் வாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அப்பாவைப் போல அசத்தட்டும் அர்ஜூனும்...!
தகவல் உதவி} தட்ஸ் தமிழ்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்தகருத்துக்களை பகிரலாமே!
Comments
Post a Comment