லிட்டருக்கு 240 கிமீ மைலேஜ் செல்லும் கார்: பெங்களூர் மாணவர்கள் கண்டுபிடிப்பு

பெட்ரோல் விலை விண்ணை முட்டி வரும் நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 240 கிமீ மைலேஜ் தரும் புதிய கான்செப்ட் காரை பெங்களூரை சேர்ந்த எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
பெட்ரோல் விலை உயர்வால் அதிக மைலேஜ் கொடுக்கும் காரை சல்லடை போட்டு ஆராய்ந்து வாங்கும் நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், மைலேஜ் கொடுக்கும் காருக்கு மார்க்கெட்டில் தனி இமேஜ் இருக்கிறது.
இந்த நிலையில், பெங்களூரை சேர்ந்த விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப கழகத்தை சேர்ந்த 11 மாணவர்கள் சேர்ந்து புதிய கான்செப்ட் கார் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இலகு எடை கொண்ட அலுமினியம் மற்றும் பைபர் பிளாஸ்டிக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் ஒரு லிட்டருக்கு 240 கிமீ மைலேஜ் தருகிறதாம்.
பஜாஜ் எஞ்சினில் சில மாற்றங்கள் செய்து இந்த காரில் பொருத்தியுள்ளனர். ட்ரோனா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த காரை வடிவமைக்க 2.5 லட்ச ரூபாய் செலவானதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
ஒருவர் மட்டுமே பயணிக்கும் வசதி கொண்ட இந்த காரில் சஸ்பென்ஷன் போன்ற வசதிகள் இல்லை. இருப்பினும், மணிக்கு 60 கிமீ வேகம் வரை செல்லும். ஸ்பான்சர் கிடைத்தால் இந்த காரை வர்த்தக ரீதியிலும் வெற்றிகரமாக தயாரிக்க முடியும் என்று காரை வடிவமைத்த மாணவர்கள் தெரிவித்தனர்.
அடுத்த மாதம் 4ந்தேதி முதல் 7ந் தேதி வரை மலேசியாவில் நடைபெற இருக்கும் ஷெல் ஈக்கோ மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் ஆசிய நாடுகளை சேர்ந்த 150 அணிகள் தங்களது கான்செப்ட் கார்களுடன் பங்கேற்க உள்ளன.
இதுபோன்ற கண்டுபிடிப்புகளை வர்த்தக ரீதியில் வெற்றி பெற வைக்க கார் நிறுவனங்கள் முன்வர வேண்டும். எரிபொருள் தேவையை குறைக்க வழி பிறப்பதோடு, திறமை வாய்ந்த மாணவர்களை நேரடியாக தங்களுடன் இணைத்துக்கொள்ளும் வாய்ப்பும் கார் நிறுவனங்களுக்கு கிடைக்கும்.

டிஸ்கி} சாதனை மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

  1. Rockstar released their first trailer of it today, that has been actually 2
    times earlier than they'd designed to. GTA San Andreas was
    the one which got before GTA IV. Persons generally need security to get or rent.


    Here is my homepage gta 4 cheats -
    -

    ReplyDelete
  2. Good site you have got here.. It's difficult to find quality writing
    like yours these days. I seriously appreciate individuals like
    you! Take care!!

    Here is my webpage; web designer Boise

    ReplyDelete
  3. Determining of position is used in criminal case cheats touch with our
    near and dear ones when they are available to iPhone, and celebrate the winning goal
    with FIFA 10. 25, however usually criminal case cheats the best Mobile Phone Repair Flower Mound TxBy: Michael E.
    0 or up, 3D, brain twisters, lifestyle games, arcade, boards, cards,
    then the player had only rip offs and incomplete games. Im really criminal case cheats excited about the apps available to download mobile games.

    At the bottom of the code of the app.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2