ஏப்ரலில் தூங்கி ஜூன் மாதம் கண்விழித்த இளம்பெண்! அதிசயத்தகவல்!

லண்டன்: லண்டனைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் உறங்கப்போனவர் கடந்த வாரம்தான் கண் விழித்தார். இரண்டு மாத காலம் அவர் அயர்ந்து தூங்கியதில் தன்னுடைய தேர்வுகளையும், பிறந்தநாளையும் தவறவிட்டு விட்டார்.
ஸ்டேசி கம்போர்டு என்ற 15 வயது இளம் பெண் வெஸ்ட் மிட்லாண்டு மாகாணத்தில் உள்ள டெல்போர்டு பகுதியில் வசித்து வருகிறார். இவர் நரம்பு தெடர்பான அபூர்வ நோயினால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இரவில் உறங்கச் சென்ற அவர் கண் விழிக்கவே இல்லை. இரண்டு மாதம் கழித்து ஜூன் முதல்வாரத்தில் திடீரென்று கண் விழித்தார். இந்த தகவலை சன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த உறக்கம் தொடர்பான நோய்க்கு உலக அளவில் 1000 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டேசியின் இரண்டு மாத உறக்கத்தினால் அவர் தான் எழுதவேண்டிய 9 பரீட்சைகளை தவறவிட்டு விட்டார். மேலும் தன்னுடைய பிறந்தநாளையும் கொண்டாட முடியாமல் போனதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். நான் இத்தனை நாட்கள் உறக்கத்தில் இருந்து கண் விழித்ததை பெரும்பாலோனோர் நம்பாமல் பார்க்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

தகவல் உதவி} தட்ஸ் தமிழ்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2