முஷாரப்பை அடித்த மாதூரி! ஜோக்!
முஷாரப் ஜோக்! எங்கோ எதிலோ எப்போதோ படித்தது!
பாக்.முன்னாள் அதிபர் முஷாரப், இந்தியபிரதமர்
மன்மோகன்சிங், இந்தி நடிகை மாதுரி தீட்சித்,இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர்
மார்கரெட் தாட்சர் ஆகியோர் ஒரே ரயில் கம்பார்ட்மெண்டில் பயனித்துக்
கொண்டிருந்தனர். ஓடிக்கொண்டிருந்த ரயில் திடீரென ஒரு மலைக்குகையில்
நுழைந்தது.பெட்டி முழுக்க கும்மிருட்டு! அப்போது ஒரு கிஸ்ஸிங்க்- முத்தமிடும்
சப்தமும் அதை தொடர்ந்து எவர் கன்னத்திலோ அடி விழும் ஓசையும் கேட்டது.. அடுத்த சில
நொடிகளில் மலைக்குகையை விட்டு வெளியே வந்தது ரயில்.பெட்டியினுள் வெளிச்சம்
பரவியது. தாட்சரும், மன்மோகனும் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல்
அமர்ந்திருந்தனர்.
முஷாரப்போ சிவந்த வலது கன்னத்துடன் இரு உள்ளங்கைகளாலும் கன்னத்தை
பிடித்தபடி கால்களில் கைகளை முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். எவருமே எதுவுமே
பேசிக்கொள்ளவில்லை. அப்போது தாட்சர் நினைத்தார். இந்த பாகிஸ்தானியர்கள் மாதுரி
மீது ஏன் தான் இப்படி கிறுக்கு பிடித்து அலைகின்றனரோ?மலைக்குகையினுள் ரயில்
நுழைந்தபோது மாதுரிக்கு முத்தம் கொடுக்க முஷாரப் முயன்றிருப்பார். அந்த பெண்
சரியாகத்தான் கொடுத்திருக்கிறாள் என அவரது எண்ண ஓட்டம் சென்றது.
மாதுரியின் எண்ணமோ இப்படி சென்றது ‘எனக்கு கிஸ் கொடுக்க முயன்று இருட்டில்
தெரியாமல் தாட்சருக்கு கிஸ் கொடுத்துவிட்டார் முஷாரப். தாட்சர் திரும்ப சரியாக
கொடுத்துவிட்டார் என்று நினைத்துக் கொண்டார்.
“சே..
என்ன பைத்தியக்காரத் தனம் இந்த கிழவன் (மன்மோகன்) மாதுரிக்கு முத்தம் கொடுக்க
முயன்றிருக்கும் நான் தான் அது என்று நினைத்து எனக்கு அறை கொடுத்துவிட்டாள்
மாதுரி” என நினைத்துக் கொண்டார் முஷாரப்.
அடுத்த மலைக்குகையில் ரயில் நுழையும் போது இன்னொரு முறை முத்த சத்தம்
எழுப்பு இன்னொரு அடி முஷாரப்பிற்கு கொடுத்துவிடலாம் என்று திட்டம் போட்டார்
மன்மோகன்!
எப்படி இந்திய மூளை!
எங்கோ எதிலோ எப்போதோ படித்தது!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!
நல்ல நகைச்சுவை, பகிர்விற்கு நன்றி.
ReplyDelete